விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும்,அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (யோபு 7: 17,18)

தேவன் மனிதனை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை தெளிவுபடுத்தும் யோபு, இவை எல்லவற்றையும் பெற மனிதன் எம்மாத்திரம் என்று தமது உள்ளத்தின் குமுறலை வெளிப்படுத்துகிறார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமை சந்திக்க பகலின் குளிர்ச்சியான வேளையில் உலாவின (ஆதி 3:8) தேவன், தாம் சர்வ வல்லவராய் இருந்தும் மனிதனை ஒரு பொருட்டாக எண்ணி அவனைத் தேடி வருகின்றார். நாம் எம்மாத்திரம்.

ஆதாமைக் கானவில்லை என்றதும் ஆதாமே நீ எங்கே இருக்கின்றாய் என்று பெயரை சொல்லி கூப்பிடுகின்றார் (ஆதி 3:9). தேவன் நம்மீது சிந்தை வைக்க நாம் எம்மாத்திரம். மனிதர்களாகிய நாமோ பாவம் செய்வதால் தேவ மகிமை அற்றவர்களாகி தேவனை விட்டு தூரம் சென்றோம். ஆனாலும் தேவன் நம்மை நேசித்து சொந்த குமாரனை நமக்காக தந்தாரே. நினைத்து பாருங்கள் இயேசு தமது இரத்தத்தை நமக்காய் சிந்தி, காலை தோறும் அவரது கிருபையை பொழிந்து நம்மை விசாரித்து நடத்துகிறாரே. இவ்வளவு பெரிய அன்புக்கு நிகராய் நாம் எம்மாத்திரம்.

இந்த விஞ்ஞான உலகில் எந்த ஒரு வாகனத்தையும் தயாரித்த பின்னர் அந்த வாகனத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சோதனை செய்து, அதில் ஆயில் லெவல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். எதாவது ஒரு பழுது இருப்பின் அதை சரி செய்வதையும் பாத்திருப்போம். பாருங்கள் நமது கர்த்தர் நிம்ஷந்தோரும் நம்மை சோதித்து அறிகின்றாராம். இந்த மாபபெரும் தயவுக்கு நிகராய் மனிதன் எம்மாத்திரம். இப்படியாய் நம்மை நேசிக்கின்ற கர்த்தருக்கு நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை சொல்லுகின்றோமா என சிந்தித்து பாருங்கள். இல்லையென்று சொன்னால் அனுதினமும் கர்த்தருக்கு நன்றி செலுத்துவேன் என்று பொருத்தனை செய்து நிறைவேற்றுங்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment