விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11: 1

மனித வாழ்வில் நிச்சயம் இருக்க வேண்டிய இரண்டு விசுவாசங்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 1. நம்ப்படுகிறவைகளின் உறுதி 2.காணப்படாதவைகளின் நிச்சயம்

நம்ப்படுகிறவைகளின் உறுதி
நாம் ஒரு மைதானத்தின் ஓடுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த மைதானத்தை ஐந்து நிமிடத்தில் ஒரு முறை சுற்றி வந்துவிட்டோம். அடுத்த நாள் அந்த மைதானத்திற்கு வருகிறோம். நமக்கு நிச்சயம் தெரியும் அந்த மைதானத்தை என்னால் ஐந்து நிமிடத்தில் சுற்றி வர முடியும் என்று.  அதே போலத்தான் தேவனும் நமது வாழ்வில் அநேக அதிசயங்களை செய்து நம்மை காத்து வழி நடத்திருக்க கூடும். எதிர் காலத்திலும் நம் தேவன் நம்மை அதே போல காத்து நடத்த வல்லவர் என்று விசுவாசிப்பது "நம்ப்படுகிறவைகளின் உறுதி" என்ற விசுவாசமாகும்.

2.காணப்படாதவைகளின் நிச்சயம்
அந்த மைதானத்தை ஐந்து நிமிடத்தில் சுற்றி வந்த நாம் அடுத்த அதே மைதானத்தை மூன்று நிமிடத்தில் சுற்றி வரமுடியும் என்பதுதான் காணப்படாதவைகளின் நிச்சயம் என்ற விசுவாசமாகும். கண்ணுக்கு புலப்படாவிட்டாலும் தேவன் இருக்கிறார். அவரே அகிலத்தையும் படைத்தவர் என்று விசுவாசிப்பதாகும். கண்டு விசுவாசிப்பவர்களை விட காணாது விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்" என்பது இயேசுவின் வாக்கு. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் தேவன் கொடுக்கின்ற வாக்குதங்கள் நிறைவேற "காணப்படாதவைகளின் நிச்சயம்" என்ற விசுவாசம் அதிக அளவில் இருக்க வேண்டும்.

ஆகவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் "நம்ப்படுகிறவைகளின் உறுதி" என்ற விசுவாசமும், “காணப்படாதவைகளின் நிச்சயம்என்ற விசுவாசமும் நிச்சயம் இருக்க வேண்டும். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment