விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்- இயேசு (மத்தேயு 9:13)

இயேசு கிறிஸ்து தன்னைப் பாவியாகக் கண்டுணராத எந்த ஒரு மனிதனையும் இரட்சிப்பதில்லை.
எல்லோரும் எப்போது பாவம் செய்தார்கள்? நாமெல்லோரும் ஆதாமுக்குள் பாவம் செய்தோம்,. இதையே பவுல் அப்போஸ்தலன் 1 கொரி. 15:22இல் பின்வருமாறு கூறுகிறார், “ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்”. ஏதேன் தோட்டத்தில் மனிதன் பாவத்தோடு படைக்கப்படவில்லை. ஆனால், ஆதாம் பாவம் செய்த உடனேயே நாமும் அப்பாவத்திற்குப் பொறுப்பாளிகளாக குற்றம் சுமத்தப்பட்டோம்.  அதுமட்டுமல்லாமல், நாம் பிறந்த பின்பு செய்கின்ற பாவச்செயல்களினால் நமது குற்ற உணர்வு மேலும் அதிகரிக்கின்றது என்று வேதம் போதிக்கின்றது. ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை என்று வேதம் கூறுகின்றது (பிரசங்கி 7:20). ஒவ்வொரு சிறு பாவமும் நமது குற்றவுணர்வை மேலும் அதிகப்படுத்துகிறது.

சிலுவையிலேயே தேவன் தனது மக்களின் பாவங்கள் அனைத்தையும், தனது குமாரனின் மேல் சுமத்தினார். அச்சிலுவையில் இயேசு கிறிஸ்து நமது சாபங்களைத் தன்மேல் சுமந்தார். கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்என்று பவுல் கூறுகிறார் (கலா. 3:13). “அத்தோடு, நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி. 5:21) என்றும் பவுல் கூறுவதைப் பார்க்கிறோம்.

சிலுவையானது, தேவன்  நீதியுள்ளவராக இருந்தும் குற்றமுள்ள பாவிகளை எப்படி மன்னிக்க முடியும் என்பதை விளக்கிக்காட்டும் ஒரு நினைவுச்சின்னம். ஆகவே ஒரு மனிதன் தன்னை பாவி என்று உணர்ந்துகொள்ளுதல் இரட்சிப்பின் முதல் படியாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அந்த பாவங்களை சுமந்து தீர்த்து வீட்டார் என்று வாயினால் அறிக்கையிட்டு மனம்திரும்பி, கிறிஸ்துவுக்காக பரிசுத்தமாக வாழந்தால் நிச்சயம் பரலோகம் செல்லலாம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment