விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

உம்மை நம்புவேன்

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன். சங்கீதம் 56 : 3-4

இஸ்ரவேல் நாட்டை அரசாண்ட தாவீது ராஜா தனக்கு வந்த பயத்தை எப்படி மேற்கொண்டார் என்பதை சங்கீதம் 56 : 3-4 வசனத்திலிருந்து அறிய முடிகின்றது. அழக்காக அவர் சொல்கிறார் நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன். நாம் உம்மை நம்புவதால் பயப்படமாட்டேன் என்று. தாவீது அரசனுக்கு பல எதிரிகள் இருந்த்தால் அவர்க்கு பயம் வருகின்றது. அந்த நேரத்தில் அவர் தனது நம்பிக்கையை தன் சுய பெலத்திலோ அல்லது சொந்த படை பெலத்திலோ வைக்காமல் தேவன் மீது தமது நம்பிக்கையை வைக்கிறார். அதினால் நான் பயப்படமாட்டேன் என்ற விசுவாச அறிக்கையும் செய்கிறார். உலகத்தில் வாழும் நமக்கும் பயமில்லாத வாழ்க்கை வாழ தேவன் மீது நமது நம்பிக்கையை வைப்பது அவசியமாகும்.

இந்த உலகத்தில் பயம் என்ற அனுபவத்தில் வராத மனிதர்கள் நிச்சயம் இருக்க முடியாது. பயம் பல காரணங்களால் மனிதனுக்கு ஏற்படுகின்றது. படித்து கொண்டிருக்கும் போது நல்ல வேளை கிடைக்குமா கிடைக்காதா என்ற பயம் இருக்கும். வைரஸ் மற்றும் தொற்று நோய் பரவும் பொழுது அது நம்மையும் நமது குடும்பத்தினரையும் தொற்றிக்கொள்ளுமோ என்ற பயம் வரும். இப்படியாக பயம் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விட்டது. ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால்  'பயப்படாதேஎன்ற வார்த்தை வேதாகமத்தில் 365 தடவை வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு 365  நாட்கள் என்பதால் ஒவ்வொரு  நாளைக்கும் பயப்படாதே என்று தேவன்  வாக்குக் கொடுத்திருக்கிறார்.

நமது தேவன் பயத்தின் தேவன் அல்ல. அவர் ஜெயத்தின் தேவன். அவரது பிள்ளைகள் நாம்மும் பயம் கொள்ளுவதற்கு அல்ல ஜெயம் கொள்ளவதற்காக தெரிந்துகொள்ளப்பட்டுள்ளோம்.

நமது நம்பிக்கையை தேவனில் வைப்போம். பயத்தை விடுத்து ஜெயத்தை எடுப்போம். தேசத்தை சுதந்தரிப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " உம்மை நம்புவேன் "

Post a Comment