விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். நீதிமொழிகள் 8:17,20,21

இந்த வசனத்தில் இயேசு தமது பிள்ளைகள் மேல் கொண்டுள்ள  இரண்டு ஆசைகளை காணமுடிகிறது. முதலாவதாக நாம் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் என்ற ஆசை, இரண்டாவதாக நாம் மெய்பொருளை சுதந்தரித்து அவரோடு வாழ வேண்டும்என்ற ஆசை.

முதலாவதாக நாம் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும்என்பதை பார்க்கலாம். இயேசு என்னை நேசிக்கிறார் என்று அநேக முறை நாம் சொல்லிருக்கலாம். அது உண்மை தான், ஆனால் நாம் அவரை நேசிகின்றோமா, எந்த அளவு அவரை நேசிக்கின்றோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போம். குழந்தைகளை தூக்கி செல்லும் தகப்பனிடத்தில், குழந்தையானது எவ்வளவு விளையாடுகிறது என்று பாருங்கள். சட்டை பையில் கைவிட்டு பனைத்தை எடுக்கும். முகத்தை பிஞ்சு நகத்தால் பிடித்து இழுக்கும். இவை எல்லாவற்றிலும் தகப்பன் மிகுந்த ஆனந்தப்பட்டு மகிழ்வதை பார்க்கின்றோம். இயேசுவும் கூட அந்த மாதிரியான ஒரு உறவை நம்மிடத்தில் எதிர்பார்கின்றார். ஆகவே தான் நமக்கு, “அப்பா பிதாவேஎன்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் உரிமையை தந்திருக்கிறார். நாம் அவரை அதிகமாய் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இரண்டாவதாக நாம் மெய்பொருளை சுதந்தரித்து அவரோடு வாழ வேண்டும்என்ற இயேசுவின் ஆசையை குறித்து பார்க்கலாம். அந்த குழந்தையினிடத்தில் தகப்பனுடைய சட்டை பையில் இருக்கும் பணத்தை எடுக்காதே என்று சொல்லி பாருங்கள். தகப்பன் சொல்லவார் எனக்குரிய அனைத்தும் என் குழந்தைக்கு தான் சொந்தம் என்று. இதே போல தான் இயேசு தன்னிடத்தில் இருக்கும் அநேக மெய்ப்பொருளை நாம் சுதந்தரிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார். அதினால் தான் நம்மை நீதியின் பாதையில் நடத்தி அவரோடு சேர்த்துக்கொள்ள துடின்கின்றார். ஆகவே நாம் இயேசுவை அதிகமாய் நேசித்து அவர் காண்பித்த நீதியின் வழியில் வாழ்ந்தால் நிச்சயம் பரலோகத்தின் பொக்கிசங்களை சுதந்தரித்து இயேசுவோடு கூட சந்தோஷமாய் வாழலாம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " "

Post a Comment