விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இறைவனது அன்பு (29 May 2014)



என் கிறிஸ்தவ வாழ்க்கையை புரட்சியான மாற்றம் செய்த ஓர் சத்தியம் உண்டு. அதென்னவெனில், பிதா, இயேசுவை சித்ததுபோலவே நம்மையும் நேசிக்கிறார் (யோவான் 17:23) என்று இயேசு நமக்கு அருளிய உன்னத வெளிப்பாடேயாகும். மேலும், இவ்விதமாய் பிதா ‘நம்மை நேசிக்கும் ஆச்சரியமான நேசத்தை இவ்வுலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்றும் இயேசு ஜெபித்தார் . ஆனால் இவ்வுலகம் அவ்வாறு அறிந்துகொள்ளுமுன், இச்சத்தியம் "முதலாவது" நம் ஜீவியத்தில் நிஜமாய் மாறவேண்டுமே!

அநேக ஆண்டுகள் நான் மனச்சோர்விற்கு அடிமையாக வாழ்ந்து தோற்கடிக்கப்பட்டவன். இவ்வாறு நான் இருந்தது பிதாவின் சித்தம் இல்லைதான், இருந்தாலும் நானோ அதிலிருந்து விடுதலையாக முடியாமல் தவித்தேன். என்ன விந்தை! "பிதா இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்" என்ற சத்தியத்தைக் காண என் கண்கள் திறக்கப்பட்ட 'அந்த நாளிலிருந்து' எல்லாம் அடியோடு மாறிவிட்டது!! என் வாழ்வின் பாதைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொன்றும், என் அன்பின் பிதாவின் கையிலிருந்தே வருகின்றன என்பதை இப்போது தெளிவாய் காண்கிறேன்.

அவர் என்னைக் கண்ணின் மணிபோல் காக்கிறதைக் கண்டுகொண்டபடியால், இப்போது என் வாழ்வின் எந்த சூழ்நிலையும், என்னை முறுமுறுக்கவோ, மனச்சோர்வடையவோ செய்திட முடிவதில்லை!! பவுல் கூறிய "போதுமென்ற மனதுடனே இருக்கும்"இரகசியத்தையும் கற்றுக்கொண்டு என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலேயும் தேவனைத் துதிக்கிறேன் (பிலிப்பியர் 4:4, 11; 1 தெச. 5:18). ஆ! இப்போழுது, "தேவன் இயேசுவை நேசித்தது போலவே என்னையும் நேசிக்கிறார்" என்ற சத்தியம் என் வாழ்வில் அசைக்க முடியாத அஸ்திவாரமாய் ஆகிவிட்டது!!

இம்மாபெரும் சத்தியத்தைக் காணும்படி உங்கள் கண்கள் மாத்திரம் திறக்கப்பட்டுவிட்டால் உங்கள் வாழ்க்கையின் முழு அணுகுமுறையையும் இச்சத்தியம் மாற்றிவிடும்! மாத்திரமல்ல, உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா முறுமுறுப்பும் மனச்சோர்வும், நம்பிக்கையின்மையும் அழிந்து ஒழிந்துபோகும்! இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமென்று நான் அறிந்திருக்கிறேன், ஏனெனில், இவையாவும் என் வாழ்க்கையில் நிறைவேறியிருக்கிறதே!!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " இறைவனது அன்பு (29 May 2014) "

Post a Comment