விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

உங்கள் ஜெபத்தை எதிர்பார்க்கின்றார்



நம்மில் அநேகருடைய சகோதர சகோதரிகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துவின் அன்பை ஆழமாக ருசித்து பார்க்கவில்லை. அப்படிப்பட்ட நமது குடும்பத்தினர்களின் குறைவுகள் நீங்க நாம் அவர்களுக்காக ஜெபிகின்றோமா? ஜெபத்தை கேட்க்கும் நமது கர்த்தர் நம்மிடமிருந்து நமது குடும்பத்தினருக்கான ஜெபத்தையும் எதிர்பார்க்கின்றார்.

ஆபிரகாம் பிள்ளை இல்லாதிருந்தும் தனக்காகவும் தன் மனைவிக்காகவும் தனக்கு சந்ததி இல்லையே என்ற துக்கத்தோடு ஜெபித்தான் (ஆதி 15:1-6). ஆபிரகாமின் வேலைக்காரன் தன்னுடைய எஜமானனின் மகனாகிய ஈசாக்குக்கு தகுந்த மனைவி கிடைக்க உதவும்படி ஜெபித்தான் (ஆதி 24:12-14). ஈசாக்கு பிள்ளைப்பேறு இல்லாதிருந்தும் தன் மனைவி ரெபெக்காளுக்காக ஜெபித்தான் (ஆதி 25:21). யாக்கோபு நீண்ட ஆண்டுகளாக பிரிந்து தன்மீது மிகுந்த கோபத்துடனிருக்கும் தன் சகோதரன் ஏசாவை சந்திக்கப்போகும் முன் ஜெபித்தான் (ஆதி 32:9-12).

மோசே, இஸ்ரவேல் மக்களை பொன்னாலான கன்றுக்குட்டியை தொழுது கொள்ள வைத்த தன் சகோதரன் ஆரோனுக்காய் கர்த்தருடைய இரக்கம் கிடைக்கும்படி ஜெபித்தான் (உபா 9:20). அன்னாள், தன்னுடைய பிள்ளைப்பேறு இன்மையை மாற்றி ஒரு மகனைத் தருவாரானால் அவனைக் கர்த்தருக்கே திரும்ப கொடுத்து விடுவேன் என்று பொருத்தனை செய்து கர்த்தரை நோக்கி ஜெபித்தாள் (1 சாமு 1:9-20). தாவீது தன் மகன் சாலோமோனுக்கு கர்த்தர் ஒரு உண்மையுள்ள இருதயத்தை கொடுத்து இஸ்ரவேல் மக்களை ஆண்டு வழிநடத்தவும், தேவனுகென்று ஆலயத்தை கட்டவேண்டுமென்பதற்காக ஜெபித்தான். (1 நாளா 29:16-19

இப்படி வேத்தில் பலர் தங்களின் குடும்பத்தினருக்காக ஜெபித்திருக்க நாமும் நமது குடும்ப உறவுகளுக்காக ஜெபிப்போம். அநேகரை கிறிஸ்துவிடம் சேர்ப்போம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " உங்கள் ஜெபத்தை எதிர்பார்க்கின்றார் "

Post a Comment