விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கழுகுகளைப்போல புதுபெலன் (26 May 2014)நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.சங்கீதம் 103:5

பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிக சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர் வாழும் பறவைகள் இனம் இவைகள்தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். ஆனால் அந்த எழுபது வயது வரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச் செல்ல முடியாது. அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும்.

இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள்தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்துபோவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப் போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரகாத்திருக்கும். அதுபோலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புதுநகங்கள் முளைக்கத் தொடங்கும்.

புது நகங்கள் வளரத் தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப் போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும். சில சமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம். பல சமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்க வேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.ஏசாயா40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " கழுகுகளைப்போல புதுபெலன் (26 May 2014) "

Post a Comment