நான் (இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள்
பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; மத்தேயு 5:44-45
பிரபல ஹோட்டல் ஒன்றில் ஐஸ் கிரீம் சாப்பிட ஒரு சிறுவன் சென்றான். அந்த ஹோட்டலில் உணவு பரிமாற அநேக வேலையாட்கள் இருந்தார்கள். பெரிய பணக்காரர்களுக்கு பரிமாறினால் கொஞ்சம் டிப்ஸ் கிடைக்கும். ஆகவே அங்கிருந்த அதிகார பலம் படைத்த வேலையாட்களே பணக்காரர்களுக்கு பரிமாறுவார்கள். வீட்டின் வறுமையால் அந்த ஹோட்டலின் உணவு பரிமாறும் வேலைக்கு வந்திருந்தான் தங்கராசு. கல்லூரிக்கு செல்லும் வயதில் இதுபோன்ற வேலைக்கு வந்ததால் மிகுந்த விரக்தியோடு இருந்தான். தங்கராசு எவ்வளவு கடினமாய் வேலை செய்தாலும் அதற்கு தகுந்த சம்பளம் அவனுக்கு கிடைக்காததால் வாழ்வில் மேலும் விரக்தியடைந்தான். கூட்டம் நிறைந்த மதிய உணவின் நேரத்தில் சிறுவன் அமர்திருப்பதைக்கண்டு எந்த சர்வரும் சிறுவன் அருகில் செல்லவில்லை. இதைக்கண்ட தங்கராசு, அந்த சிறுவனிடம் சென்று, “சாப்ப்டுவதற்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். தங்கராசுவின் ஏழ்மை நிலையைக் கண்ட சிறுவன் சிரித்த முகத்துடன், “என்ன ஐஸ் கிரீம் இருக்கின்றது?” என்று கேட்டான். சாக்லேட் மற்றும் வெனிலா ஐஸ் கிரீம் இருப்பதாக கூறினான் தங்கராசு. சற்று சிந்தித்த சிறுவன், “சாக்லேட் ஐஸ் கிரீம் என்ன விலை?” என்று கேட்டான். கூட்டம் நிறைந்த நேரத்தில் இப்படி கேள்வி கேட்பதை பொறுக்க முடியாத தங்கராசு, “15 ருபாய்” என கோபத்துடன் கூறினான். தனது சட்டை பைக்குள் இருந்த சில்லறையை வெளியில் எடுத்து எண்ணிய சிறுவன், தங்கராசுவை நோக்கி, “வெனிலா ஐஸ் கிரீம் என்ன விலை?” என்று கேட்டான். தங்கராசுக்கு கோபம் தலைக்கேறவே, சிறுவனை அடிக்காத குறையோடு, “10 ருபாய்” எனக் கூறினான். மீண்டும் சில்லரையை எண்ணிப் பார்த்த சிறுவன் சிரித்த முகத்தோடு, தனக்கு வெனிலா ஐஸ் கிரீம் கொண்டு வரும்படி கூறினான்.
சிறுவனின் கேளிவிகளால் கோபம் அடைந்த தங்கராசு, சிறுவனுக்கு நல்ல படம் கற்பிக்க வேண்டுமென நினைத்து, சிறுவன் கேட்ட ஐஸ் கிரீமை எடுத்து வராமல் பிறரை கவனிக்க தொடங்கினான். வெகுநேரமாகியும் பொறுமையோடு காத்திருந்தான் சிறுவன். சற்று மனமிரங்கிய தங்கராசு, சிறுவன் கேட்ட ஐஸ் கிரீமை எடுத்து வந்து வேகமாக அவனது டேபிளில் வைத்தான். வெகுநேரத்திற்கு பின்பு தான் கேட்ட ஐஸ் கிரீம் வந்ததால் மகிழ்ச்சியோடு அந்த சாப்பிட்டான் சிறுவன். சாப்பிட்டு முடித்த பின் அதற்கான பத்து ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்து சென்றான் சிறுவன். அவன் சாப்பிட டேபிளில் இருந்த ஐஸ் கிரீம் தட்டை எடுத்த தங்கராசு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். காரணம் அந்த தட்டின் கீழே சிறுவன் ஐந்து ரூபாயை வைத்து, ‘உங்களுடைய சேவைக்கு நன்றி. கர்த்தர் உங்களை நேசிகின்றார். அவர் நேசிக்கின்ற உங்களை என்னால் வெறுக்க இயலாது. நீங்கள் எனக்கு செய்த சேவைக்காக நான் சேமித்த ஐந்து ரூபாயை தருகிறேன். கர்த்தர் உங்கள் வறுமையை நீக்கி, ஆசீர்வதிப்பார்” என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்தான் சிறுவன். தன்னுடைய தவறை உணர்ந்தான் தங்கராசு. மேலும் சிறுவனின் மன்னிக்கும் செயல் தங்கராசுவை வெகுவாய் கவர்ததால், தன்னுடைய வாழ்க்கையை கிறிஸ்துவிடம் அர்ப்பணித்து கிறிஸ்துவைப் போல பிறரை மன்னித்து வாழ தொடங்கினான்.
இயேசு கூறினார், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று. இதை சிலுவையில் தன்னை அறைந்த மக்களை மன்னித்து செய்தும் காட்டினார். நம்முடைய வாழ்வில் இதை நடைமுறைப் படுத்துவது சற்று கடினம் என்றாலும், தேவனுக்கு பிள்ளையாய் இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக இதை கடைப்பிடித்தே ஆக வேண்டும். நமக்கு தீமை செய்பவர்களையும் நம்மை குறித்து தவறாய் பேசினவர்களையும் நாம் மன்னிப்பத்தின் மூலம் நாம் சமாதான வாழ்வை அடைவதோடு மட்டுமல்லாமல் தகப்பனாகிய இயேசுவின் நம்மூலமாய் மகிமைப்படுவார். மன்னித்து வாழ்வோம். இயேசுவில் மகிழ்வோம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் "
Post a Comment