விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஆத்துமாவின் நிலை என்ன?

பிறசவம் (பிற + சவம்) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னெவென்றால் மனிதனாய் பிறக்கின்றவான் பிற்க்காலத்தில் சவமாக வேண்டும். (இந்த வார்த்தை நாளடைவில் பிரசவம் என்ற உருமாற்றம் பெற்றது). இப்படிப்பட்ட மனிதன் மரித்த பின் அவனுடைய ஆத்துமாவின் நிலை என்ன?

வேதம் தெளிவாக சொர்க்கம் மற்றும் நரகம் என்ற இரண்டு இடங்கள் இருப்பதாகவும் இதில் ஒன்றில் மனிதனுடைய ஆத்துமா நித்ய நிதயமாக வாழும் என்று தெளிவாக கூறுகின்றது. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அதுபோல் அப்படி ஒரு இடம் இல்லாமல் அதை பற்றி எல்லா மதமும் குறிப்பிட வாய்ப்பு இல்லை. இயேசு நரகத்தை குறித்து வெளிப்படையாக போதித்தார். ஏனெனில் எந்த மனிதனும், சாத்தானுக்கென்று உருவாக்கப்பட்ட அக்கினி கந்தகம் எரியும் நரகத்துக்கு செல்வது இயேசுவின் சித்தம் இல்லை. எனவே தான் இயேசு சொல்கிறார் “உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். “ மாற்கு 9:43-44.

இதை வாசிக்கின்ற அன்பு சகோதர சகோதரியே, நீங்களும் நானும் பரலோகம் சேரவேண்டும் என்பதற்க்க்காகத்தான் இயேசு கிறித்து சிலுவையில் தனது கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தினார். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து நமக்கு பதிலாக நம்முடைய இடத்தில் அவர் மரித்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திற்கான விலைமதிப்பற்ற கிரயம் ஆகும். நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசு தீர்த்தார். நாம் செலுத்தாமலிருப்பதற்காக இயேசு அதை செலுத்தி தீர்த்தார். இயேசுவின் மரணம் நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க போதுமானதாயிருந்தது என்று அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நிருபிக்கிறது ஆகவேதான் இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சகர் ஆக இருக்கிறார் உங்கள் இரட்சகர் இயேசுவை நம்புகிறீர்களா?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீர்களானால், பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் கூறுங்கள்.. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையில் என்னுடைய பாவங்களுக்கவும் மீருதளுக்காகவும் இரத்தம் சிந்தியிருகின்றார். அந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவத்தையும் நீக்கி என்னை சுத்திகரிக்கும் என்பதை விசுவாசிகின்றேன். என்னை மன்னியும் இயேசுவே. இது வரை என் வாழ்வில் நான் செய்து வந்த பாவங்களை விட்டுவிடுகிறேன். இனிமேல் நான் உமக்காய் வாழுவேன். நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன் இயேசுவே. நீர் என்னை நித்திய வாழ்வாகிய பரலோகத்திற்கு நடத்துவீர் என்பதை விசுவாசிகின்றேன். உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி இயேசுவே! இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் பிதாவே..ஆமென்!"


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " ஆத்துமாவின் நிலை என்ன? "

Post a Comment