விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

தன் பிழைகளை உணருகிறவன் யார்

தன் பிழைகளை உணருகிறவன் யார்மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்அப்பொழுது நான் உத்தமனாகிபெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்” சங்கீதம் 19:12-13. 
மறைவான குற்றங்கள் மற்றும் துணிகரமான பாவங்கள்இந்த இரண்டு காரியங்களையும் செய்யாத மனிதர்கள் இருக்கவே முடியாது. இதை உணருகின்ற மனிதர்கள் வெகுகுறைவு. இந்த இரண்டு பாவத்தின் முடிவுமே மிகவும் கொடியதாய் இருக்கும். தாவீது அரசன் அந்த பாவத்தினால் வரும் பெரும்பாதகத்துக்கு தன்னை நீங்கலாக்கும் படி கர்த்தரை நோக்கி கதறுகிறார். அவர் என்ன மறைவான குற்றம் செய்தார்என்ன துணிகரமான பாவம் செய்தார்எப்படி அதிலிருந்து விடுதலை பெற்றார் என்பதையே இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.


மறைவான குற்றங்கள்
ஒரு நாள் மாலைப் பொழுதுதாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் பத்சேபா-வை தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. எரேமியா தீர்க்கதரிசி எழுதுகிறார்: "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும்மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார்?" (எரே 17:9). தாவீது அரசனுக்குள் இருந்த திருக்குள்ளதும்மகா கேடுள்ளதுமான இருதயம் செயல்பட தொடங்கியது. கணவன் இருக்கும் பொழுது எந்த ஒரு பெண்ணையும் யாரும் விவாகம் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அதைப் பெருங்குற்றமாய் கருதுவார்கள். ஆகவே மறைவாக அந்த பெண்ணின் கணவன் உரியா-வை கொள்ள திட்டம் தீட்டினார். யோவாபு என்ற போர்த்தளபதிக்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார். யோபாவு அதை வாசித்துப் பார்த்தார். யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. அவனை எதிரிகள் கொல்லட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் பணிவுடன் உரியா நின்றுகொண்டிருந்தான். அமலேக்கியரோடு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தாவீதின் படை மீண்டும் அமலேக்கியரை அழிப்பதற்காகப் புறப்பட்டது. உரியா சாகவேண்டும்’ என்ற தாவீது அரசனின் கட்டளைப்படிஉரியா போர்களத்தில் முதலாவதாக அனுப்ப பட்டார். தாவீதின் விருப்படி எதிரிகள் அவனைக் கொன்றனர். இப்படி மறைவான குற்றம் செய்து பத்சேபா-வை தனக்கு மனைவியாக்கினார் தாவீது.


துணிகரமான பாவம்
உரியா என்பவருடைய மனைவி பத்சேபா-வை அடையும்படி தாவீது அரசன் தந்திரமாய் உரியாவை போரிலே கொன்றார். பின்னர் பத்சேபா-வை தனக்கு மனைவியாக்கி கொண்டார். எத்தனை துணிகரமான பாவம் பாருங்கள். இதினால் கோபம் அடைந்த கர்த்தர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். தைரியமாய் மிகுந்த நாத்தான் தீர்க்கதரிசி தாவீது அரசனிடம், “உம்முடைய இந்த செயலினால் கடவுள் மிகவும் கோபமடைந்து விட்டார். உன் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருந்தார். நீ நடத்திய அனைத்து போர்களிலும் வென்றாயே ! உன் வேண்டுதல்கள் ஏதும் நிராகரிக்கப் படவில்லையே ! ஒரு ஆடு மேய்ப்பவன் என்னும் நிலையிலிருந்து அரசன் என்னும் இருக்கைக்கு உன்னை அழைத்து வந்தது அவர் தானே… அவருக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறாயே… தவறில்லையா ?” என கர்த்தரின் கோபத்தை வெளிப்படுத்தினார். 

தன் பிழைகளை உணருகிறவன் யார்?
தாவீது அரசர் தம்முடைய பிழைகளை உணர்ந்தார். உடனே மண்டியிட்டு அழுதார். கடவுளே… என்னுடைய அறிவீனத்தினாலும்,பலவீனத்தினாலும் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னியும்’ என்று கதறினார். தாவீது மனம் திருந்தியதை அறிந்த கடவுள் நாத்தான் வழியாக தாவீதிடம் மீண்டும் பேசினார். அரசே… கடவுள் இன்னும் உங்களை மிகவும் அன்பு செய்கிறார். ஆனால் நீர் செய்த தவறுக்குத் தண்டனையாக உமக்கும் பத்சேபாவுக்கும் பிறக்கும் முதல் மகன் இறந்து போவான்’. இந்த வார்த்தைகளைக் கேட்ட தாவீது இன்னும் அதிகமாக வருந்தினான். தன் தவறினால் பத்சேபாவும் வருத்தப் படுவாளே என்றெண்ணி அழுதார். பத்சேபாவின் பிரசவ காலம் நெருங்கியது. தாவீது தொடர்ந்து ஆண்டவரிடம் தன் மகனை மீட்குமாறு வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் கடவுளின் தீர்ப்பு மாறவில்லை. குழந்தை பிறந்தது ! பிறந்த மறுதினமே நோய்வாய்ப் பட்டது! ஏழாம் நாளில் இறந்துபோனது. தாவீது மனம் திருந்தினார். இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். கடவுளும் அவரை ஆசீர்வதித்து அவருக்கு இரண்டாவதாய் ஒரு மகனைக் கொடுத்தார். அந்தக் குழந்தைதான் ஞானத்தின் இருப்பிடமாய் பிற்காலத்தில் விளங்கிய சாலமோன்.
இதை வாசித்துக்கொண்டிருகின்ற நீங்களும் உங்கள் வாழ்வில் மறைவான குற்றங்களும் துணிகரமான பாவங்களும் செய்திருக்கலாம். நமக்குப் பாவமில்லையென்போமானால்நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்சத்தியம் நமக்குள் இராது. - (யோவான் 1:8). நீதி மொழி 28: 13 தன் பாவங்களை மறைக்கின்றவன் வாழ்வடைய மாட்டான். ஆனால்அவைகளை அறிக்கை செய்துவிட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான். பாவங்களை ஓப்புக் கொண்டுதாழ்ச்சியோடு நம்மை ஓப்புக் கொடுத்துபாவ அறிக்கை செய்துஅவர் தூயவராய் இருப்பது போல நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளுவோம். நான் உத்தமனாகி,பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன் என்று தாவீது அரசன் சொல்வது போல நாமும் நமது பிழைகளை உணர்ந்துபாவத்தை விட்டு விலகி உத்தமமாய் வாழ்ந்தால்கர்த்தர் நம்மை பெரும்பாதகத்துக்கு நீங்கலாக்கி இரட்சிப்பார். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " தன் பிழைகளை உணருகிறவன் யார் "

Post a Comment