விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு, விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாமிசமோ பலவீனமுள்ளது (மத். 26: 41)

சமீபத்தில் ஒடிசாவை பைலின் புயல் தாக்கும் முன்னதாகவே வானிலை ஆய்வாளர்கள் அதை அறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். புயல் வரப்போகிறது நீங்கள் எல்லோரும் அழியப்போகிறீர்கள், ஜாக்கிரதை என்பதைப் போலவே  கர்த்தராகிய இயேசு தம்முடைய நெருங்கிய நண்பர்களாகிய பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் நோக்கி நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்  என்று பார்க்கிறோம். ஆபத்து நெருங்குகிறது ஆனால் விழித்திருந்து ஜெபித்தால் அதிலிருந்து தப்பி விடலாம் என்று அறிவுரை கூறினார்.

இந்த அறிவுரை நமக்கும் கூடத்தான். புயல் போன்ற ஆபத்து நம் வாழ்வில் எப்பொழுது வீசும் என்றே தெரியாது. அதை கணிக்கவும் எந்த வானிலை ஆராய்ச்சியாளர்களாலும் கிடையாது. நாம் வேதத்தை வாசிப்பதையும், ஜெபிப்பதையும் விட்டு விட்டு உறங்கும்போது சாத்தான் நம்மை தொட்டிலாடுவது போல ஆட்டி தூங்க வைக்கிறான்! சமீபத்தில் நின்றுகொண்டிருந்த காரில் AC- போட்டு தூங்கியவர்கள் AC-யிலிருந்து வெளிவந்த கார்பன் விஷவாயுவை முகர்ந்ததால் தூங்கிய நிலையிலேயே மரித்துபோயினர். பிசாசானவன் அநேகரை தூங்கிய நிலையிலையே மரிக்க வைக்கவேண்டுமென துடிப்புடன் செயல்படுகிறான். இன்றைக்கும் அநேக கிறிஸ்த்தவர்கள் கனநித்திரை செய்பவர்களாக காணப்படுகிறார்கள்.

அன்று நித்திரையில் விழுந்ததால் இடறிய பேதுரு, இன்று நம்மைப் பார்த்து , 1 பேதுரு 5: 8 ல்  ” .. விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத் தேடி சுற்றித்திரிகிறான் ”    என்கிறார்.  சுய நம்பிக்கையில் நான் கடைசி பரியந்தமும் நிலைத்திருப்பேன் என்ற பேதுரு, தலைகுப்புற இடறி விழுந்த பின், விழித்திருந்து ஜெபித்தால் மட்டுமே ஜெயம் வரும் என்பதை தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்டார். கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் நாம் சோதனைக்கு உட்படாதபடிக்கு, பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நின்று, வருகையில் மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு நம்மை தகுதி படுத்தும் படிக்கு அவர் சமுகத்தில் விழித்திருந்து கண்ணீரோடு  ஜெபிப்போமா. கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ Like Tag Share ☆★☆
To Listen our songs 
http://www.youtube.com/davidi4u
For daily messages 
https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment