விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்



“கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்” சங்கீதம் 13:6
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆

தேவன் ஆராதனையில் பிரியப்படுகிறவர். ஆதலால் தான் மனிதனை படைத்த பொழுது பாட்டினால் தேவனை துதிக்கும் தன்மையையும் சேர்த்தே படைத்தார். தூதர்கள் தேவனை ஆராதிப்பது போல மனித குலமும் தேவனை பாடலினால் துதித்து மகிமைப்படுத்த வேண்டுமென விரும்பினார். ஆகவே தான் பாடல் பிறக்க தேவையான ரம்யமான சூழலை ஏதேன் தோட்டத்தில் மனிதனுக்கு உருவாக்கி கொடுத்தார். மனித தேவனுக்கு கீழ்ப்படியாமல் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்ட போது தனக்குலிருந்த பாடும் தன்மையை தேவனை துதித்து மகிமைப்படுத்தாமல் தனது தனிப்பட்ட காரியங்களுக்காக அதாவது குழந்தையின் அழுகையை நிறுத்த, அவர்களை தூங்க வைக்க, சந்தோஷ மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் மனிதனை கவரக்கூடிய பாடல்களை பாட தொடங்கினார்கள்.

ஆனால் ஈசாயின் குமாரனாகிய தாவீதோ கர்த்தரை மகிமைப்படுத்தி பாடுவதிலேயே தன் வாழ்வின் பெரும்பகுதியை கழித்தார். “கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்” என்று தன்னை குறித்து விசுவாச அறிக்கை செய்கிறார். எனவே தான் “தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன்” என்று தாவீது அழைக்கப்படுகிறார். ( I சாமுவேல் 13:14)

ஆனால் இந்நாட்களில் சினிமா இசையில் மூழ்கி அநேக ஜனங்களும் சிறு பிள்ளைகளும் ஆபாசமான வரிகளை பாடலாக பாடுவதை பார்க்கின்றோம். கிறிஸ்தவர்களும் அதை போலத்தான் செய்கிறார்கள். கேட்டால் பழைய காலத்து பாடல்கள் என்றால் தனி இனிமைதான் என்று சொல்பவர்களும்
உண்டு. சினிமா பாடல் கேட்டால் என்ன தவறு என்று தர்க்கம் செய்பவர்களும் உண்டு. நீதிமான்களின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சங்கீதம் 118:15ல் வாசிக்கிறோம். நம் இருதயத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தமாகிய தேவனின் கீதங்கள் இருக்கும்போது, சத்துரு அதற்குள் வர இடமிருக்காது. மாறாக சினிமா பாடல்களின் சத்தம் நமது வீட்டில் ஒலிக்குமென்றால் நிச்சயமாக தேவன் அதில் பிரியப்படமட்டார். கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை எண்ணிபார்த்து தாவீதப்போல கர்த்ததரை துதிக்கும் போது கர்த்தர் நம்மேல் பிரியமாயிருப்பார்.

நம் இருதயம் பாட்டினால் எப்போதும் நிறைந்திருப்பதாக. ஒருவேளை இருதயம் துக்கத்தால் நிறைந்திருந்தால் தேவனை துதிக்கும் பாடல் வராது. ஒருவேளை கோபத்தால் நிறைந்திருந்தால், அல்லது மற்றவர் மேல் வெறுப்பில் இருந்தால், இருதயம் கருவிக் கொண்டே இருக்குமே ஒழிய பாடல்வராது. எல்லாவற்றையும் புறம்பே தள்ளி, தேவனை துதிக்கும்பாடல்களுக்கு இருதயத்தில இடம் கொடுப்போம், மற்றவை எல்லாம் தன்னாலே மாறிப்போகும். கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்! ஆமென் அல்லேலூயா!

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong


0 Response to " "

Post a Comment