விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


எது ஞானம்? எது புத்தி?
நன்றாக படித்து மதிப்பெண் எடுத்தவர்களை இந்த உலகம் ஞானவான் என்று சொல்கிறது. ஒரு சில வேலைகளை நன்றாய் செய்பவர்களை புத்திமான்கள் என்கிறது உலகம். ஆனால் வேதம் தெளிவாக எது ஞானம்? எது புத்தி? என்று தெளிவாக கூறுகின்றது.

மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான். யோபு 28:28

ஆம் கிறிஸ்த்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரியே, நீதிமொழிகள் 1:7-ல் கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று பார்க்கின்றோம். கர்த்தருக்கு பயந்து ஞானத்தோடும் பொல்லாபுக்கு விலகி புத்தியோடும் வாழ்வோம். இந்த செய்தியை உங்கள் முகபுத்தகத்தில் பகிர்வு செய்யுங்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்

சகோ. டேவிட் தாமோதரன்

0 Response to " "

Post a Comment