விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


ஆதாமை நேசித்த தேவன் உன்னையும் நேசிகின்றார்

ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் சர்ப்பம் ஏவாளை ஏமாற்றுவதையும் அதினால் தேவன் சர்ப்பத்தை வயிற்றினால் ஊர்ந்து மண்ணை தின்பாய் என்று சபிப்பதையும் பார்க்கின்றோம். ஏவாளின் கீழ்ப்படியாமையால் கர்பவதியாய் இருக்கும் இருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சபித்தார்.

ஆனால் ஆதாமையோ தனது ரூபத்தின் படிய படைத்திருந்த படியால் அவனை சபிக்க தேவனுக்கு மனம் வரவில்லை. அதினால்தான் ஆதாமின் கீழ்ப்படியாமையின் நிமித்தம் தேவன் பூமியை சபித்தார். அதுவரை கனிகளை கொடுத்து வந்த பூமியானது முள்ளையும் குருக்கையும் முளைபிக்க துவங்கியது. ஆக நாம் பூமின்யின் பலனை புசிக்க வருத்த்த்தோடு வேலை செய்யவேண்டியதுள்ளது.

7ம் வசனத்தில் பார்க்கிறோம் "அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்". நினைத்து பாருங்கள் கடின வேலை செய்பவர்களுக்கு அத்தியிலையினால் ஆடைகள் அணிந்திருந்தால் எப்படி இருக்கும் என்று. தேவன் ஆதாமையும் ஏவாளையும் நேசித்தார் என்பதிற்கு ஆதாரமாக "ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்." என்று 21-ம் வசனத்தில் வாசிக்கின்றோம். பாருங்கள் நமது தெய்வத்தின் அன்பை. அவர் நீதிள்ளவராய் கீழ்ப்படியாமைக்கு சபித்த அதே தேவன் இறக்கம் நிறைந்தவராய் அவர்களுக்கு தன் கைகளினாலேயே தோலினால் ஆடை செய்து கொடுத்தார்.

ஆம் பிரியமானவர்களே, நமது தேவன் அன்பின் தேவன். ஆதாமை நேசித்த அதே தேவன் உன்னையும் என்னையும் நேசிக்கிறவராகவே இருக்கின்றார். ஆதலால் நம்மை நேசிக்க யாரும் இல்லையே என்று கலங்காதீர்கள்.  தேவன் தன் சொந்த குமாரனாகிய இயேசுவை நம்மெல்லோரும் நித்தியஜீவனை அடையும்படிக்குதந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். இந்த செய்தியை உங்கள் முகபுத்தகத்தில் பகிர்வு செய்யுங்கள். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்

சகோ. டேவிட் தாமோதரன்
Join us @ https://www.facebook.com/VVSongs

Like Comment Tag Share

0 Response to " "

Post a Comment