விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

என் ஆத்துமாவைக் குணமாக்கும்


கர்த்தாவேஎன்மேல் இரக்கமாயிரும்உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். சங்கீதம் 41:4

தாவீது அரசர் தான் பாவம் செய்ததால் தனது ஆத்துமாவில் வியாதி வந்ததாகவும் தன்னை குணமாக்கும்படியாய் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடுகின்றார். இன்றைய நாட்களில் சரீர சுகத்திற்காக மன்றாடுபவர்கள் அதிகமாய் இருக்கின்றார்கள். ஆனால் எந்த ஒரு மனிதனும் பாவம் செய்யும் பொழுதுஅது அவனுடைய ஆத்துமாவில் வியாதியை கொண்டுவருகிறது. 


உடலில் வியாதி வந்தால் எப்படி நாம் வேதனைகுள்ளாக செல்கின்றோமோ அதேபோல பாவம் செய்வதால் ஆத்துமாவில் வரும் வியதியானதுஆத்துமாவை வேதனைப்படுத்தும். உடலில் வியாதி வந்தால் எப்படி நாம் சோர்வடைகின்றோமோ அதேபோல நமது ஆத்துமாவும் சோர்வடைந்துவிடும். இந்த ஆத்துமாவில் ஏற்படும் வியாதியிலிருந்து விடுதலையை ஒவ்வொரும் பெற்றிருக்க வேண்டும். எப்படி ஆத்துமாவை சுகப்படுத்த முடியும்?அதை தான் மேற்கண்ட வசனங்களில் தாவீது அரசர் தெளிவாக சொல்கின்றார் கர்த்தாவேஎன்மேல் இரக்கமாயிரும்” என்று. கர்த்தரிடம் தான் செய்த பாவத்திற்கு மனஸ்தாபப்ட்டு கதருகின்றார். இப்படியாய் தன் பாவம் செய்து தன் ஆத்துமாவில் ஏற்பட்டிருந்த வியாதியிலிருந்து சுகத்தைப் பெற்றுக்கொண்டார், உடலில் ஏற்படும் நோயை சுகமாக்க இன்றைக்கு அநேக மருத்துவமனைகள் உள்ளன. அநேக அற்புத சுமளிக்கும் கூட்டங்களும் நடைபெருகின்றன. ஆனால் ஆத்துமாவில் நமக்கு சுகம் தேவைபட்டால் ஒரே ஒரு வழிதான் உள்ளதுநாம் செய்த பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டுகர்த்தரிடம் அறிக்கை செய்து அவற்றை விட்டுவிட வேண்டும். அப்பொழுது இயேசு நாமேல் மனமிரங்கி நமது ஆத்துமாவை சுகப்படுத்துவார். அதனால் சங்கீதம் 57:1-ல் தாவீது சொல்கிறார் எனக்கு இரங்கும்தேவனேஎனக்கு இரங்கும்உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது;விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்”. ஆத்துமாவிற்கு சுகம் தேவனிடத்தில் மாத்திரமே உள்ளது.

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்னமனுஷன் தன் ஆத்துமாவுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்என இயேசுகிறிஸ்து கூறினார். ஆம் இந்த உலகத்தின் ஆஸ்திகளையும்ஏன் முழு உலகத்தையும் ஆண்டு அனுபவிப்பனாக இருந்தாலும்தன் ஆத்துமாவை அவன் இழந்து போனால்அவனைவிட பரிதாபமானவன் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை! உடலில் சுகமோடு வாழ்ந்து ஆத்துமாவில் வியாதியோடு வாழ்ந்தாலும் எந்த பயனும் இல்லை. ஆகவே பாவத்தினால் ஆத்துமாவில் வரும் வியாதி நம்மை அனுகாதபடி அனுதினமும் ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் வளருவோம். 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " என் ஆத்துமாவைக் குணமாக்கும் "

Post a Comment