விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வேத வசனம் - விதையுள்ள கனி (22 May 2014)



மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!

தேவன்: விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; ஆதியாகமம் 1:11

அதியகமம் 1.29 –ல், தேவன் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் மனிதனுக்கு ஆகாரமாக கொடுக்கின்றார். விதைதரும் கனிகளை படித்த்தின் முக்கிய நோக்கம், மனிதனுக்கு அந்த விதையின் மூலமாக இன்னும் அநேக கனிகள் கிடைக்கும் என்பதுதான். ஒரு சிறிய உதாரணத்தோடு இந்த வசனத்தின் ஆழத்தை உணர்ந்து கொள்வோம். ஒரு சுவைமிகுந்த மாம்பழத்தை நாம் சாபிடுகிறோம். அதே போன்ற சுவைமிகுந்த மாம்பழத்தை ஒரு மாம்பழ தோட்டகார்ரும் சாப்பிடுகிறார். நாம் சாப்பிடும் போது மாம்பழத்தின் அதிக சுவையால் அதை வாங்கி கொடுத்தவர்களை பாராட்டலாம் அல்லது அதை விற்ற கடைக்காரர்களை பாராட்டலாம். அந்த மாம்பழத்தை சாப்பிட்டுமுடித்தவுடன் அதன் விதையை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம். ஆனால் மாம்பழ தோட்டக்காரன் அதை சாப்பிடும் போது அவனது சிந்தை முழுவதும் அந்த பழத்தின் விதை மீதுதான் இருக்கும். இந்த விதையை எடுத்துசென்று நல்ல தோட்டத்தில் விதைத்தால் இந்த விதையானது இதே போன்ற சுவைமிகுந்த அதிக பழங்களைதரும் அந்த விதையை பத்திரபடுத்துவான்.

இயேசு வேதவசனத்தை விதையோடு ஒப்பிட்டு பேசுகின்றார். “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். - (மத்தேயு 13:23)”. நம்மில் பலர் வேதவசனத்தின் ஆழத்தை நன்கு சுவைத்துவிட்டு அதைக் கொடுத்த ஊழியர்களையும் பிறரையும் பாராட்டுகிறோம். பின்பதாக அந்த விதையை அப்படியே போட்டுவிட்டு வேறெங்காவது சுவைமிகுந்த வசனம் கிடைக்குமா என தேடியலைகின்றோம்.

தேவன் நமக்கு வசனத்தின் ஆழங்களை வெளிப்படுத்துவது நாம் அந்த விதையை சென்று ஏற்ற இடத்தில் விதைக்க வேண்டுமென்பதற்க்காகதான். நம்மிடத்தில் அநேக வசனமாகிய விதைகள் இருகின்றது. ஏற்ற இடத்தில் அந்த வசனமாகிய விதையை விதைத்தால் நிச்சயமாக நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தரும். ஆதியாகமம் 1:11 -ல் சொல்லப்பட்டபடி தேவன் நமக்கு விதையுடைய கனியாகிய வேத வசனத்தை நமது ஆவிக்குரிய ஆகாரமாக கொடுத்திருகின்றார். கனியாகிய வேதவசனத்தின் ஆழத்தை புசிக்கும் நாம் விதையாகிய வசனத்தையும் விதைப்போம். நிச்சயம் அறுவடையை காண்போம். ஆமேன்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " வேத வசனம் - விதையுள்ள கனி (22 May 2014) "

Post a Comment