விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஜெபிக்கும் கரங்கள்

15-ம் நூற்றாண்டில் நியூயார்க் என்ற நகரின் அருகிலுள்ள சிறிய கிராமத்தில் ஒரு பொற்கொல்லர் தனது பதினெட்டு பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். அத்தனை பிள்ளைகளுக்கும் உணவளிக்க வேண்டுமென்பதே அவருக்கு கடினமாக இருந்தது. தனது ஏழ்மை நிலையின் மத்தியிலும் தனது பிள்ளைகள் மேல் கரிசனை உள்ளவராக பதினெட்டு மணி நேரம் வேலை செய்வார்.இந்த குடும்ப சூழ்நிலையிலும் தனது மூத்த குமாரர்களில் இருவரான ஆல்ப்ரிசெட், ஆல்பெர்ட் என்ற இருவருக்கும் கலைபொருட்கள் உருவாக்கும் படிப்பை நியூயார்க் கலையியல் கல்லூரியில் கற்க விருப்பம் கொண்டனர். எனினும் தமது தகப்பனால் அந்த விருப்பதை நிறைவேற்ற முடியாது என்பதனையும் அறிந்திருந்தனர். ஆனாலும் இரவு நேரத்தில் நெருக்கடி மிகுந்த படுக்கை அறையில் அவர்கள் இதைக்குறித்து பேசுவார்கள். நீண்ட யோசனைக்கு பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். நம்மில் ஒருவர் நியூயார்க் கலையியல் கல்லூரியில் சென்று நான்கு ஆண்டு பயில வேண்டும். மற்றொருவர் அருகில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து அந்த வருமானத்தை கொண்டு மற்றவனை படிக்க வைக்க வேண்டும். அவன் படித்து முடித்த பின் கலைப்பொருட்களை செய்து விற்பதினால் வரும் வருமானத்தைக் கொண்டு மற்றொருவனை படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். அப்படியானால் யார் முதலில் படிக்க செல்வது? யார் முதலில் சுரங்கத்திற்கு செல்வது என்ற கேள்வி எழுந்தது. ஒரு நாணயத்தை சுண்டிப்போட்டு வென்றவன் படிப்புக்கும், இழந்தவன் சுரங்க வேலைக்கும் செல்ல வேண்டுமென முடிவு செய்தனர். இருவரும் அதற்கு இசைந்து, ஒரு ஞாயிற்று கிழமை ஆலயம் முடித்து வீட்டிற்கு வந்த பின்பு நாணயத்தை சுண்டி விட்டனர். நாணயம் ஆல்ப்ரிசெட்க்கு சாதகமாக விழுந்ததால் அவன் படிப்புக்கு செல்ல வேண்டுமென்றும், ஆல்பெர்ட் சுரங்க வேலைக்கு செல்ல வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆல்பெர்ட் நான்கு ஆண்டுகள் ஆபத்தான சுரங்கத்தில் வேலை பார்க்க சென்றான். அந்த வருமானத்தைக் கொண்டு ஆல்ப்ரிசெட்டின் படிப்பிற்கு உதவி செய்தான். கடைதெடுக்கும் மரக்கலை மற்றும் உலோகக் கலையில் சக மாணவர்களை விட சிறந்து விளங்கினான் ஆல்ப்ரிசெட். அவன் பட்டதாரியாகும் போதே தனது வேலைத்திறன் மூலம் வருமானம் வர ஆரம்பித்தது. சில வேலைகளுக்கான ஆர்டர்களும் அவனுக்கு கிடைத்தன. ஆல்ப்ரிசெட் வெற்றியுடன் படிப்பை முடித்து வீடு திரும்பினான். குடும்பத்தினருக்கு பெரிய விருந்து ஒன்றை ஏற்ப்பாடு செய்தான். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி. விருந்து முடியும் தருணத்தில் ஆல்ப்ரிசெட் எழுந்து பேச ஆரம்பித்தான். “என்னுடைய சகோதரன் ஆல்பெர்டின் பெரிய தியாகத்தின் காரணமாகத் தான் நான் நியூயார்க் சென்று நான்கு வருட படிப்பை முடித்து திரும்பி வந்திருகின்றேன். என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி தந்த எனது சகோதரனின் உழைப்பையும் தியாகத்தையும் மறக்க முடியாது. எங்களுடைய தீர்மானத்தினபடி இது ஆல்பெர்ட்டின் முறை. அவன் நியூயார்க் நகருக்கு படிக்க செல்ல வேண்டும். படிப்பிற்கு ஆகும் காரியங்களை நான் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்ப்பேன்” என்று பேசி முடித்தான்.

இப்பொழுது குடும்பத்தினர் அணைவரும் ஆல்பெர்ட் அமர்த்திருந்த இடத்தை பார்த்தார்கள். ஆல்பெர்ட் தலை குனிந்த நிலையில், இரண்டு கண்களிலும் கண்ணீர் வழிந்தோட நடுக்கத்தோடு அமர்த்திருந்தான். எல்லோரும் அவனை உற்று நோக்க, கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றான். “ இல்லை, நான் போகவில்லை. என்னால் நியூயார்க் நகருக்கு சென்று படிக்க இயலாது. எனக்கு காலம் கடந்து விட்டது” என்றான். பின்னர் ஆல்ப்ரிசெட்டை அன்போடு நோக்கிப் பார்த்தான். “ஆல்ப்ரிசெட், என்னை நன்றாகப் பார், நான் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எனது கைகளில் ஏற்ப்படிருக்கும் தழும்புகளைப் பார். என் கைகளால் ஒரு டம்ளரை கூட தூக்க முடியாத அளவிற்கு ஆகிவிட்டேன். நிலக்கரி சுரங்க வேலையினால் எனக்கு ஆர்தரிட்டடீஸ் என்ற வியாதி தோன்றிவிட்டது. ஆகவே என்னால் படிக்க இயலாது” என்று கூறி விட்டார். ஆல்பெர்ட்டின் கைகளிலும், உள்ளங்கைகளிலும் ஏற்பட்டிருக்கும் காயத்தைப் பார்த்த ஆல்ப்ரிசெட் மனம் உடைந்து போனார். தனது சகோதரனின் தியாகத்தை சரித்தரமே நினைவு கூறவேண்டுமென ஆசைப்பட்டார். ஒருநாள் ஆல்பெர்ட்டை சந்திக்கும்படி ஆல்ப்ரிசெட் தற்செயலாய் சென்றார். அந்த நேரம் ஆல்பெர்ட் தனது இரண்டு கரங்களையும் கூப்பி உயர்த்தியவாறு ஜெபித்துக் கொண்டிருந்தார். சூரிய ஒளியின் கரங்களுக்கு பின்பதாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த காட்சியைக் கண்ட ஆல்ப்ரிசெட், உடனடியாக தத்ரூபமாக அதை ஓவியமாக வரைந்தார். தனது சகோதரன் தனக்கு செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், அந்த ஓவியத்திற்கு “ஜெபிக்கும் கரங்கள்” என்று பெயரிட்டார். இது ஆல்ப்ரிசெட்டின் மிகச் சிறந்த படைப்பு என்று சொல்லி உலகமே அவரைப் பாராட்டியது. சுமார் 450 வருடங்கள் கடந்த நிலையில், இன்றைக்கும் ஜெபிக்கும் கரங்களின் ஓவியங்களை அநேக இடங்களில் வைத்திருப்பார்கள்.  ஆல்பெர்ட் தனது சகோதரனுக்கு செய்த தியாகத்தை இன்றளவும் பிரதிபளிகின்றது.

தனது சகோதரனின் தியாகத்தை ஆல்ப்ரிசெட்டினால் நினைவு கூறமுடியும் என்றால், சிலுவையில் நமது பாவங்களுக்காய் இரத்த சிந்திய, இயேசுவின் உயிர்த்தியாகத்தை நினைவு அனுதினமும் நினைவு கூறவேண்டியது நமது கடமையல்லவா. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (ரோமர் 5:7-8). அனுதினமும் கிறிஸ்துவின் தியாகத்தை நினைப்போம். அவருடைய அன்பை விட்டு பிரியாது இருப்போம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஜெபிக்கும் கரங்கள் "

Post a Comment