விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

மீன்களை பிடிங்க மக்களே

ஒரு ஊரில் அழகான பெரிய ஏறி இருந்தது. அந்த ஊரின் மக்களுக்கு மீன்பிடிக்க தெரியாத காரணத்தால் அந்த ஏரியில் அதிக அளவில் மீன்கள் காணப்பட்டது. இதை அறிந்த இறக்க குணம் நிறைந்த அந்த ஊரின் மன்னன்மக்களிடம் மீன்களை பிடிக்குமாறு கூறினான். இந்த மக்களோ அதை கேட்க்காமல் தட்டிக்களித்தே வந்தனர். ஒரு நாள் மன்னன் வெளிஊர் சென்று ஒருவருடம் தங்க நேரிட்டது. புறப்பட்டு செல்வதற்கு முன்பதாக ஒரு ஆணையை பிறபித்து சென்றான். அது என்னவேன்றால் தான் வெளிஊர் சென்று திரும்பி வரும்போது மக்கள் அணைவருக்கும் மீன்பிடிக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

மன்ன்ன் வெளிஊர் சென்ற பின்பதாக மக்கள் தினசரி ஒரு இடத்தில் கூடி எப்படி மீன்களை பிடிப்பது என்று விவாதிக்க தொடங்கினர். பல முறைகளில் மீன்கள் பிடிப்பதை குறித்து விவாதித்தனர். நாட்கள் கடந்து கொண்டே இருத்து. பேச்சு பேச்சாகத்தான் இருந்த்தேயன்றி யாரும் ஏரியில் இறங்கி மீன் பிடித்த பாடில்லை. 11 மாதங்கள் இப்படியாக கடந்து செல்ல மக்களுக்கு பயம் வரஆரம்பித்தது. மன்ன்ன் வந்தால் மீன்பிட்டிக்க தெரியாதவர்களின் கதி என்னவாகும், எப்படி மன்ன்னை சமாளிப்பதும் என்று விவாதிக்க தொடங்கினர். நம் மன்னர் இறக்க குணம் நிறைந்தவர். ஆதலால் நமக்கு மரணதண்டனை விதிக்கமாட்டார் என தங்களுக்கு தாங்களே தீர்மானித்துகொண்டனர். வெளிஊர் சென்ற மன்னன் தன் மீன் பிடித்துகொண்டிருப்பர்கள் என நம்பி வந்தார். ஆனால் வெறும் பேச்சுக்காரர்களைத்தான் பார்த்தானே தவிர ஏரியில் இறங்கி மீன்பிடிக்கும் ஒருவனையும் காணவில்லை. கோபத்தில் பொங்கி எழுந்த மன்னன் அனைவரையும் மீன்பிடிக்காத அனைவரயும் மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான். மன்னன் தங்கள் மீது கருணை காட்டுவார் என்று நம்பிய மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

இயேசுவும் ராஜாவும் நம்மிடம் மனிதர்களாகிய மீன்களை பிடிக்கும் படி கூறி பரலோகம் சென்றுள்ளார். அவர் திரும்பி வருகையில் மனிதர்களாகிய மீன்களை பிடிதீர்களா என்று கேட்பார். அப்போது நாம் வெறும் பேச்சாளர்களாக இருப்போமெனில் நமது நிலை கவலைக்கிடமே. அவர் இரக்கம் நிறைந்தவர் தான் அதே நேரம் நீதியானவர் கூட. ஆதலால் ஆத்துமாக்களை எப்படி பரலோகத்திற்கு நடத்துவது என்று சிந்தித்துக்கொண்டே இருக்காமல் பயமின்றி களத்தில் இறங்கி மீன்களை பிடிப்போம். சிறுமீன்களோ திமிங்கலமோ எது வலையில் அகப்படுகிறதோ அதை பரலோக கரையில் சேர்ப்போம். எத்தனையோ வித்த்தில் ஊழியம் செய்யலாம். tracks ஊழியம், சிறுவர் ஊழியம், மற்றவர்களை சபைக்கு அழைத்து வரும் ஊழியம் என பலவகை ஊழியம் உள்ளது. நம்மால் இயன்றதை செய்து இயேசுவிற்காக ஊழியம் செய்வோம். மீன்களை தருபவர் இயேசு நிச்சயமாக ஆத்துமாக்களை தருவார்.

அழியும் ஆத்துமா நம்நாட்டில் அதிகம் 
அப்பாவின் அன்பை சொல்ல நாடியே வா நீ
பூமியும் நிறைவும் கர்த்தரின் படைப்பு
அழியும் ஆத்துமாவை காணிக்கை கொடுப்போம்

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " மீன்களை பிடிங்க மக்களே "

Post a Comment