விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இயேசுவே நமது சுமைதாங்கி கல்

- வடிவ ஆளுயர சுமை தாங்கிக் கல்லை கிராமங்களின் எல்லைகளில் அநேகர் பார்த்திருப்பீர்கள். சிறு குழந்தையாய் இருக்கையில் அநேகர் அதில் தொங்கியும் விளையாடி இருப்பீர்கள். நெல், விறகு போன்ற பலவித பளுவான பொருட்களை சுமந்து செல்லும் கிராம மக்கள், அந்த பாரம் மிகுந்த சுமைகளை தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதை திரும்ப தூக்குவது கடினம். இந்த பாரத்தை எப்படியாது இறக்கி வைத்தால் சற்று இளைப்பாறலாம் என்று சொல்லி அகன்று விரிந்த மரக்கிளைகளில், பாரத்தை இறக்கி வைக்கத் தொடங்கினர். பின்னர் கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் இறந்தால், அப்பெண்ணின் நினைவாக ஊரின் எல்லையில் வடிவ ஆளுயர சுமை தாங்கிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்ற முறைமையையும் தமிழர்கள் ஏற்படுத்தினார்கள். கர்ப்பிணி பெண் வயிற்றில் சுமையோடு கூட இறந்தாலும், அவள் மூலமாய் அநேக மக்களுடைய பாரச்சுமைகள் சுமைகள் இறங்கும் படியாய் இப்படி செய்தனர். பாரத்தோடு சுமை சுமந்து, நடந்து களைப்போடு வருபவர்கள் தங்களுடைய சுமைகளைச் சற்று நேரம் இந்த சுமைதாங்கிக்கலில் இறக்கி வைத்து பின்பு இளைப்பாறுவார்கள்.

உடலின் சுமையை இறக்கி வைக்க சுமை தாங்கிக்கல் உதவுகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய வாழ்வில் பல்வேறு விதமான சுமைகளை சுமக்கின்றான். எதிர்காலத்தை குறித்த கவலை என்கிற சுமை. வேலையை குறித்து, படிப்பைக் குறித்து, உடல் நலத்தை குறித்து, குடுமபத்தை குறித்ததான பல விதமான கவலைகள் பாரச்சுமையாய் இருதயத்தில் சுமந்து மனிதன் வாழ்ந்து வருகிறான். ஒரு கர்ப்பிணி பெண்ணின் இறப்பு மனிதர்களின் சுமைகளை இறக்கி வைக்க உதவும் சுமைதாங்கிக்கல்லாய் உருபெற்றது போல கிறிஸ்துவின் சிலுவை மரணமும், மனிதர்களின் பாவ பாரச்சுமைகளை அகற்றும் சிலுவை சின்னமாக உருபெற்றது.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11: 28) என்று இயேசு மக்களுக்கு அறிகூவல் விடுத்தார். திருமுழுக்கு யோவான், இயேசுவைக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1: 29) என்று இயேசு இந்த உலகத்தில் வந்தமையின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். சுமை தாங்கி கல்லில் வைக்கும் பாரம் சிறிது நேரம் இளைப்பாறுதல் தரும். அதன்பின்பு மீண்டும் மனிதன் அந்த சுமைகளை சுமந்து நடக்க வேண்டும். ஆனால் இயேசுவின் மீது ஒருவர் தனது பாவ பாரத்தை வைக்கும் பொழுது அந்த மனிதன் மீண்டும் தனது பழைய பாவ சுமையை சுமந்து நடக்க தேவை இல்லை. அந்த பாவ பாரத்தை இயேசுவே சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார்.

இயேசு உலகத்தில் பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த் ஏசாயா என்னும் இறைவாக்கு உறைப்போர், மெய்யாகவே அவர் நம்முடையபாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடையஅக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால்குணமாகிறோம் (ஏசாயா 53 : 4-5) என்று அவருடைய சிலுவை மரணத்தை முன்னறிவித்தார். பிரியமான அன்பு சகோதர சகோதரியே, உங்களுடையமனதில் பாரத்தோடு உள்ளீர்களா? வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்என்ற இயேசுவின் அன்பு அழைப்பை நினைவு கூறுங்கள். மனதில் பாரத்தோடு பலவித கவலைகளோடு இருந்தால், உங்கள் அருகில் சுமை தாங்கிக்கல்லாய் இயேசு நிற்கின்றார் என்பதை மறந்து விடாதீர்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் வர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7). ஆகவே நாம் இன்னும் ஏன் பாரத்தை சுமந்து தவிக்க வேண்டும்? நம்முடைய பாவ பாரமா? இல்லை சாபமா? இல்லை கடன் பாரமா? இல்லை சமாதானக் குறைவா? இல்லை வேலையில்லா திண்டாட்டமா? இல்லை தீராத வியாதியா? எந்த பாரமாய் இருந்தாலும் தன்னுடைய சிலுவை சுமந்த தோளின் மேல் அவற்றையெல்லாம் நிரந்தரமாய் சுமக்க இயேசு ஆவலுள்ளவராய் இருக்கிறார்.அந்த பாட்டியை போல நாம் இராத படி, நாம் நம்முடைய எல்லா பாரத்தையும் இயேசுவிடம் இறக்கி வைப்போம்.

கர்ப்பிணியின் மரணத்தினால் தோன்றிய சுமைதாங்கி கல்லினால் நமக்கு நிரந்தர விடுதலையில்லை. கன்னியின் வயிற்றிலே தோன்றி கல்வாரி சிலுவையிலே நமது பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவே நமது நிரந்தர சுமை தாங்கி. ஐயோ, இயேசுவை அறிந்தும் நான் பாவம் செய்து விட்டேனே? என்ற குற்ற உணர்வின் சுமைகளை இயேசுவின் மீது வைத்துவிட்டு அதை கடலில் எரிந்து விட்டதாய் நினைத்து கிறித்துவில் புதிய சுதந்திர பயணத்தை தொடங்குங்கள். நாம் செய்த எல்லா பாவங்களையும் மண்ணிக்க கிறிஸ்துவின் அன்பும், அவருடைய கிருபையும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் போதுமானதாய் இருக்கின்றது. அவர் நமது பாவ பாரச்சுமைகளை நீக்கி நமக்கு இளைப்பாறுதல் தருவார்.

அன்பின் பரலோகப் பிதாவே, ஜெபத்தைக் கேட்பவரே! நாங்கள் உம்மிடம் வருகிறோம். உமக்காய் சாதித்து, உம்முடைய நாமம் மகிமைப்படும் படியாய் வாழ்ந்த யோசியா, யோசேப்பு, தானியேலைப் போல உமக்காய் வைரக்கியமாய் வாழ விரும்புகிறேன். அதற்கு தடையை எழுந்து நிற்கும் எல்லா பாவங்களையும் களைய என்னை நான் உமது கரங்களில் அர்பணிக்கின்றேன். இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறேன், நல்ல பிதாவே, ஆமென்!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " இயேசுவே நமது சுமைதாங்கி கல் "

Post a Comment