விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இரட்சிப்பின் நங்கூரம்


அந்த நம்பிக்கை (இயேசு கிறிஸ்து) நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. எபிரெயர் 6:19

நங்கூரம் இல்லாத கப்பல் ஒன்றைக் காண்பது அரிது. இந்த நங்கூரம் கப்பலை வேற்றிடம் செல்லாமல் நிலையாக நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இரும்புக்கருவி. கப்பலின் முன் பக்கத்தில் நங்கூரத்தை தொங்க விட்டிருப்பார்கள். நங்கூரம் இல்லா விட்டால், கப்பல் நடுக் கடலில் அலைகளால் மோதப்பட்டு காற்று அடித்த திசையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். எப்பொழுது வேண்டும்மனாலும் கவிழும் நிலையில் இருக்கும். நங்கூரத்தை கடலினுள் விடும்பொழுது அது கடலுக்கு அடியில் சென்று மணலின்மேல் விழும். கப்பல் செல்லும் திசையில் சிறிது தூரம் நகர்ந்த பின்னர் நங்கூரத்தின் கரங்கள் மணலினுள் பதிய தொடங்கும். அதுவரை கப்பலின் இழுவிசையில் சென்று கொண்டிருந்த நங்கூரம் மெல்ல மெல்ல கப்பலின் வேகத்தை குறைத்து இறுதியில் கப்பலின் நகர்வை நிறுத்தும்.

கப்பல் போன்ற நமது வாழ்க்கையானது, பாவம் எனும் புயல்காற்றினால் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. காரணம் நமது கப்பலில் ஜீவனைக் காப்பாற்றக்கூடிய நங்கூரம் இல்லை. இதை அறிந்த கிறிஸ்து நமது பாவங்களுக்காய் மரித்து விலையேறப்பெற்ற இரட்சிப்பு என்னும் நங்கூரத்தை நமக்கு தந்தார். நாம் அணைவரும் இந்த நங்கூரத்தை பயன்படுத்தி நிலைத்திருக்க விரும்புகின்றார். பாவம் எனும் புயல் நம்மேல் வேகமாய் மோதும் பொழுது, கிறிஸ்துவின் மேல் நாம் பாய்ச்சிய இரட்சிப்பின் நங்கூரம் நம்மை பாதுக்காக்கும். பொல்லாத பிசாசானவன், நமது வாழ்க்கை என்னும் கப்பலை சேதப்படுத்தும் எண்ணத்தில், நமது இரட்சிப்பின் நங்கூரத்தை கிறிஸ்துவில் பதிய விடாமல் சிற்றின்ப பாவ ஆசைகளை காட்டி தூண்டுவான். சிறிய பாவம் தானே, சிறிது நேர படம் தானே, சிறிது நேர சீரியல் தானே, சிறிதளவு போதை பொருள் தானே, சமூக நலன் கருதும் சினிமா பாடல் தானே, சிறிது நேர ஆபாச படம் தானே என்றெல்லாம் நாமும் நினைத்து நமது இரட்சிப்பின் நங்கூர ஆழத்தை சற்று தளர்த்துவோம். நமது வாழ்க்கை கப்பலானது, பாவக் காற்றினால் நகர தொடங்கும். மெதுவாக தானே செல்கிறது, கொஞ்ச தூரம் தானே கர்த்தரை விட்டு சென்றுள்ளேன் என்றெல்லாம் நமக்கு நாமே சிந்திக்கையில், பிசாசானவனுடைய முழு நோக்கமும் இரட்சிப்பென்னும் நங்கூரத்தின் கரங்களை உடைப்பதிலேயே இருக்கும். நங்கூரத்தின் இரண்டு கரங்களையும் உடைத்து விட்டால அந்த கப்பலை நிறுத்த இயலாமல், எங்காவது சென்று கவிழ்ந்து விடும் அல்லது மோதி அழிந்துவிடும் என்பதை அறிவான்.

சிறிது பாவம் தானே என்று அனுமதித்த நமது வாழ்க்கையானது முற்றிலும் பாவங்களினால் கட்டுபடுத்தப்பட்டு, எப்பொழுது வேண்டுமானாலும் கடலில் அழிந்து விடக்கூடிய நிலைமைக்கு வந்துவிடும். இதை வாசிக்கின்ற, இரட்சிப்பின் நங்கூரத்தை பெற்றுக்கொண்ட அன்பு விசுவாசியே, ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். நமது வாழ்க்கை கப்பல் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறதா? அல்லது பாவங்களினால் நகர்ந்து கொண்டிருகின்றதா?. ஒருவேளை உங்களுடைய வாழ்க்கை கப்பலானது பாவங்களினால் தடுமாரிகொண்டு இருந்தால், உடனடியாக கிறிஸ்து உங்களுக்கு கொடுத்த இரட்சிப்பின் நங்கூரத்தை பயன்படுத்தி நிறுத்த முயலுங்கள். இரட்சிப்பின் நங்கூரம் எந்த அளவு சேதம் அடைந்திருப்பினும் அதை சரிசெய்ய கிறிஸ்துவின் கிருபை போதுமானதாக உள்ளது. இயேசு கிறிஸ்து நமக்கு ஆத்தும நங்கூரமாயிருகிறார். அவருடைய சிலுவை மரணம் நமக்கு இரட்சிப்பின் நங்கூரமாயிருக்கிறது. நீங்கள் இதை வாசிக்கின்ற இடத்தில் கண்களை மூடி இந்த சிறிய ஜெபத்தை செய்யுங்கள். கர்த்தர் நிச்சயமாய் உங்கள் வாழ்க்கை கப்பலை பாதுகாப்பார்.

எங்களை நேசித்து வழி நடத்துகிற நல்ல தகப்பனே, பொல்லாத இந்த பாவ உலகத்தில் வாழுகின்ற உம்முடைய பிள்ளை என்னை நினைத்தருளும். என் வாழ்கையை பாதுக்காக்கும் படியாக, சிலுவையில் மரித்து, இரட்சிப்பு என்னும் நங்கூரத்தை எனக்கு தந்த படியால் உமக்கு நன்றி சொல்கின்றேன். இந்த நேரத்திலும் எனது வாழ்க்கையானது பாவங்களினால் தடுமாறிகொண்டிருகின்றது. என்னை அசையாதபடி உறுதிபடுத்தி என் ஆத்துமாவை பரனுக்கு நேராய் நடத்திடும் ஆத்ம நங்கூரமாகிய இயேசுவே, ஒருவிசையாய் நான் செய்த பாவங்களுக்காய் மனஸ்தாபப்படுகிறேன். இந்த நேரத்திலிருந்து அவற்றை செய்வதில்லை எனவும் உறுதி எடுக்கின்றேன். எனக்கு பெலன் தாரும் இயேசுவே. சேதமடைந்திருக்கும் எனது இரட்சிப்பின் நங்கூரத்தை புதுப்பித்தருளும் சுவாமி. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்ற வசனத்தின் படியாய் என்னை கழுவி சுத்தம்மாகும் தகப்பனே. இயேசுவின் பெரிதான கிருபையால் வேண்டி நிற்கிறேன் நல்ல பிதாவே. ஆமேன்.

கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
கிறிஸ்துவின் பணியில்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " இரட்சிப்பின் நங்கூரம் "

Post a Comment