விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வெல்லஸ்லி பெய்லி (1846-1937)


பதினெட்டாம் நூற்றாண்டின் கொடிய நோயாக கருதப்பட்ட தொழுநோயை இன்றைக்கு நமது சமுத்யத்தில் காணபது அரிது.. ஒரு காலத்தில் சமுதாயம் இவர்களை ஊருக்கு வெளியே தள்ளி வைத்திருந்தது. ஆனால் இன்றைக்கு  தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நமது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறோம். உண்மையாகவே நமது சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? இயேசுவின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிஷனரிகளே காரணம் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு மிஷனரியின் வாழ்க்கை வரலாறு.

வெல்லஸ்லி பெய்லியின் இளமை வாழ்க்கை
வெல்லஸ்லி பெய்லி (Wellesley Bailey) அயர்லாந்து தேசத்தில் அபேலெய்க்ஸ் (Abbeylieux) என்னும் ஊரில் 1846 ம் வருடம் ஏப்ரல் 28 ம் தேதி நில அதிபருக்கு மகனாக பிறந்தார். உலக பிரகாரமாகவும் உல்லாசமாகவும் வாழ்வதையே தனது நோக்கமாக கொண்டிருந்தார் பெய்லி. சிறு குழந்தையாய் இருக்கையில் தொடர்ந்து சபைக்கு சென்ற பெய்லி தனது இருபதாம் வயதில் சபைக்கு செல்லும் பழக்கத்தை அறவே விட்டிருந்தார். அந்த நாட்களில் அயர்லாந்து தேசத்தில் ஏற்ப்பட்ட கடும் பஞ்சம் காரணமாக அநேகர் வெளிதேசங்களில் தஞ்சம் புகுந்தனர். 1866 ம் வருடம் பெய்லி ஆஸ்திரேலியா சென்று நன்கு சம்பாதித்து வாழ முடிவு செய்து கிரேவ்சென்ட் (Gravesend) என்ற துறைமுக நகருக்கு சென்றார். அவர் செல்ல வேண்டிய கப்பல் பனிமூட்டம் காரணமாக பல தாமதமானது. அந்த சமயம் பெய்லியின் சிறுவயது தோழியான அலைஸ் கிரகாம் (Alice Grahame) சொல்லிய நேரம் கிடைக்கும் பொழுது கட்டாயமாக சபைக்கு செல் என்ற வார்த்தை அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்த பகுதியில் இருந்த சபையின் ஞாயிறு ஆராதனையில் கலந்து கொண்டார். அன்றைய செய்தி வேளையில் கூறிய, “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி,அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும்,கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா42:16) என்ற வசனம் பெய்லியை அதிகமாய் அசைத்தது. சிறு குழந்தையாய் இருக்கையில் சபைக்கு சென்றிருந்தாலும் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றிராத பெய்லி அன்றைக்கு கர்த்தர் தன்னோடு பேசுவதை உணர்ந்தார். மேக மூட்டம் களைய கப்பலில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டார்.

வெல்லஸ்லி பெய்லியின் இந்திய பயணம்
ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடம் கடினமாக உழைத்தும் லாபம் ஒன்றும் காணமுடியவில்லை. ஏமாற்றத்துடன் அயர்லாந்து திரும்பின்னார் பெய்லி. தன்னை கிறிஸ்து அவரது பணிக்காய் முன்குறித்துள்ளார் என்பதை உணர்ந்த பெய்லி, இந்தியாவில் காவல் துறையில் பணியாற்றிய தனது சகோதரனிடத்தில் செல்ல முடிவெடுத்தார். பின்னர் அமெரிக்கன் பிரஸ்பிட்டரியன் மிஷனில் (American Presbyterian Mission) சேர்ந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அம்பாலா என்ற ஊரில் சென்று ஆசிரியப் பணி செய்யுமாறு உத்தரவு பெற்று இந்தியா நோக்கி பயணமானார். அம்பாலா பட்டணம் இன்றைக்கு ஹரியானா மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1869 ம் வருடம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தார் பெய்லி. இந்தியாவில் காவல் துறையில் பணியாற்றிய தனது சகோதரன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் தனி மரமாய் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார். டாக்டர்.மோரிசன் (Dr JH Morrison) என்பவரோடு இனைந்து ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள மிஷன் பணித்தது. டாக்டர்.மோரிசன் அம்பாலா அமெரிக்க மிஷனின் தலைவராக இருந்தார்.அந்த நாட்களில் தொழு நோய் இந்தியாவில் அதிகளவில் பரவி இருந்தது. தொழுநோயாளிகளை சமுதாயம் ஊருக்கு புறம்பே தள்ளி வைத்திருந்தது. டாக்டர்.மோரிசன் அவர்களுக்கென சிறு குடிசைகளை ஏற்ப்படுத்தி அவர்களை பராமரித்து வந்தார். ஒருநாள் தொழுநோயாளிகள் வசிக்கும் குடிசைகளுக்கு பெய்லியையும் அழைத்து சென்றார். அதுவரை தொழுநோயாளிகளைப் பற்றி வேதத்தில் மட்டுமே வாசித்திருந்த பெய்லி, சூம்பின கைகளோடும், முகம் முழுவதும் புன்களோடும், குருடர்களாகவும் இருந்த மக்களைக் கண்டு வேதனையடைந்தார். தொழுநோய் தொற்றிக்கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை சீர்படுத்த இயேசு தம்மை தெரிந்து கொண்டிருப்பதை தெளிவாக உணர்ந்தார் பெய்லி. தொழுநோயாளிகளை தொடர்ந்து பராமரித்து வந்த பெய்லி, 1871 ம் வருடம் அக்டோபர் மாதம் தனது சிறுவயது தோழியான அலைஸ் கிரகாம் (Alice Grahame) என்பரை திருமணம் செய்தார். இந்த திருமணம் பாம்பே கதிட்ராளில் வைத்து நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இருவருமாக இணைந்து தொழுநோயாளிகளை பராமரித்தனர்.

தி லெபோரசி மிஷன் மலர்தல்
திருமணமாகி இரண்டு வருடங்களில் அலைஸ் கிரகாமின் உடல் நிலை மோசமாகிவிட்டது. இதினால் 1873 ம் வருடம் அமெரிக்க மிஷன் ஸ்தாபனத்தில் இருந்து விலகி தங்களுடைய சொந்த தேசமாகிய அயர்லாந்திற்கு பயணித்தனர் தம்பதியினர். அவர்களுடைய நினைவு முழுவதும் இந்தியாவில் தாங்கள் விட்டு வந்த தொழுநோயாளிகளை குறித்தே இருந்தது. அநேகருக்கு தொழுநோயாளிகளின் தேவைகளை குறித்து அறிவித்து அவர்களுக்கு உதவுமாறு பல முயற்சிகளை எடுத்தார் பெய்லி. அலைஸின் சிநேகிதிகளான பிம் சிஸ்டர்ஸ் வருடத்திற்கு முப்பது யூரோ தருவதாக வாக்களித்தனர். இந்நிலையில் அலைஸின் உடல் நிலையும் முன்னேறவே, 1875 ம் வருடம், அயர்லாந்தில் இருந்து மீண்டும் இந்தியா வந்து தி லெபோரசி மிஷன்என்ற தொழுநோயாளிகளை பாதுக்காக்கும் அமைப்பை தொடங்கினார். முப்பது யூரோ தருவதாக வாக்களித்த பிம் சிஸ்டர்ஸ், தொழுநோயாளிகளின் தேவைகளை அறிந்து அநேகரிடம் உதவிகளைப் பெற்று தொள்ளாயிரம் யூரோக்களை வருடத்திற்கு கொடுத்து உதவினர்.

தொழுநோய் மிஷனின் வளர்ச்சி
1886-ம் வருடம் தமப்தியினர் இந்தியா முழுவதும் சுற்றுபயணம் செய்து தொழுநோயாளிகளின் தேவைகளை அறிந்து கொண்டனர். இந்தியாவில் தொடங்கிய பணியானது நாளடைவில் பர்மா, சீனா, ஜப்பான், தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, சுமத்ரா தீவுகள் மற்றும் கொரியா நாடுகளில் விரிவடைந்தது. ஒருநாளில் ஆஸ்திரேலியா சென்று நன்கு சம்பாதித்து வரமுடியாத பெய்லி, தேவனின் சித்தத்திற்கு செவி சாய்த்து நடக்கையில் தேவன் அவரை உலகம் போற்றும் அளவில் உயர்த்தினார். ஐம்பது வருடத்திற்கும் அதிகமாக தொளிநோயளிக்காக உழைத்த பெய்லி 1937 ம் வருடம் தமது தொண்ணுற்று ஒன்றாம் வயதில் இறைவனது விண்ணரசில் இணைந்தார்.

வெல்லஸ்லி பெய்லியின் சாதனை
பதினெட்டாம் நூற்றாண்டில் உலகத்தில் 15 மில்லியனாக இருந்த தொழுநோயாளிகள் எண்ணிக்கை இத்தமபதியினர் மேற்கொண்ட பணியின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் 2 மில்லியனாக குறைந்தது. இன்றைக்கு முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இயங்கும் இந்த தொழுநோயாளிகளுக்கான காப்பகத்தில் 23௦௦ க்கும் அதிகமானோர் பணிசெய்து கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள்.  

மிஷனரியின் வாழ்விலிருந்து நமது வாழ்விற்கு
ஆண்டவரே நீர் என்னை தெரிந்தெடுப்பதை உணர்ந்து உமது பணி செய்ய, உமது கரங்களில் என்னை தருகிறேன் என்று அர்பணித்து செயல்பட்ட வெல்லஸ்லி பெய்லி, உலக அளவில் தொழுநோய் பரவுதலை குறைத்து, இயேசுவின் அன்பை அதிகப்படுத்தினார். நாமும் நம்மை அர்ப்பணிப்போம். கிறிஸ்துவிக்காய் சாதிப்போம். ஆமேன்


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " வெல்லஸ்லி பெய்லி (1846-1937) "

Post a Comment