விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஐசுவரிய ஆசீர்வாதம்

அவர் (அவர்) ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. II கொரி 8:9

புதிய வருடத்தில் அநேக ஆசீர்வாதமான வசனத்தை கேட்டிருப்போம். இயேசு கிறிஸ்துவைக் குறித்து பவுல் அடியார் சொல்கிறார், நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு, இயேசு தரித்திரரானார்என்று. நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு இந்த உலகத்தில் வந்த இயேசு உலக ஆசீர்வாதங்களையும், ஐசுவரியங்களையும் குறித்து பேசாமல், பரலோகதின் ஆசீர்வாதங்களை குறித்தே போதித்தார். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” என்றார். மேலும் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்(மத்தேயு 6:20&33) என்றும் கூறினார்.

ஆசீர்வாதங்கள் நமது வாழ்க்கையில் அவசியம்தான். ஆனால் நாம் தேவனுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை நாடி அங்கே நமது பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும். நினைத்து பாருங்கள் நாம் வாழும் உலகத்தில் நமக்கு ஆசீர்வாதம் வேண்டுமென பிரயாசப்படுகிற நாம், பரலோகத்தில் நமக்கு பொக்கிகிஷங்களை சேர்த்துவைக்க ஆசைப்பட்டுளோமா?. தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (II கொரி 1:20). பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு அருளிய வாக்குகள் நமது வாழ்க்கையில் நிறைவேற, முதலாவது பரலோக ராஜ்யத்தையும் அதின் நீதியையும் தேட வேண்டும். இயேசு ஏற்கனவே கடந்த வருடங்களில் நம்மை ஆசீர்வதித்திருகின்றார். அதை வைத்து நாம் பரலோக ராஜ்யத்தில் நமக்கென பொக்கிஷங்களை சேர்த்து வைத்துள்ளோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்தாக வேண்டும். பரலோக ராஜ்யத்தை தேடாமலும், அங்கு நமக்கு பொக்கிஷங்களை சேர்க்காத பட்சத்தில் உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காக நாடி ஓடுவதால் யாருக்கு என்ன பயன்.

அதிக ஸ்டார்கள் அணிந்திருக்கும் போலீசிஸ் அதிகாரிகளை பார்த்த்திருபீர்கள். அதே நேரம் ஸ்டார்கள் குறைவாக அணிந்த்திருக்கும் போலீசிஸ் ஏட்டுகளையும் பார்த்த்திருபீர்கள். இருவரும் ஒரே துறையில் இருந்தாலும் ஒருவர் மதிப்பிலும் அதிகாரத்திலும் பெரியவர். மற்றொருவர் மதிப்பிலும் அதிகாரத்திலும் சிறியவர் ஆவார். இதைப்போலவே பரலோகத்திலும் பெரியவன் மற்றும் சிறியவன் என்ற வேறுபாடுகள் (DIFFERENT GRADES) இருப்பதை இயேசு தெளிவாய் போதித்தார் (மத்தேயு 5:19, லூக்கா 28:7).

ஆகவே தான் பரலோகத்தில் நமக்கு பொக்கிகிஷங்களை சேர்க்கும்படியாகவும், பரலோக ராஜ்யத்தை நாடும் படியாகவும் இயேசு போதித்தார். இதை ஒருமனிதன் கடைபிடிக்கும் பொழுது  மாத்திரமே தேவன் அளித்த வாக்குத்தங்கள் அந்த மனிதன் வாழ்வில் நிறைவேறும். இயேசுவும் அவரது சீடர்களும் உலகத்தின்  ஆசீர்வாதங்களை இழந்து, தரிதிரராய் வாழ்ந்தாலும் பரலோகத்தில் தங்களுக்கு பொக்கிகிஷங்களை சேர்த்து வைத்தனர். இயேசு நாம் பரலோகத்தில் ஐசுவரியவான்களாகும்படிக்குதான் உலகத்தில் அவர் தரித்திரரானார். உலகத்தில் நாம் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலைமை சிறிது காலம்மட்டுமே. பரலோகத்தில் தான் நாம் நித்திய நித்தியமாய் வாழப்போகின்றோம். நான் கிறிஸ்துவுக்குள்ளக இரட்சிக்கபட்ட பொழுது, இயேசுவே என்னை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபித்தேன். கர்த்தரும் என்னை ஆசீர்வத்தித்தார். இப்பொழுது நான் பரலோகத்தில் எனக்கான பொக்கிகிஷங்களை சேர்த்து வைப்பதிலேயும், பரலோக ராஜ்யத்திற்கு ஆத்துமாக்களை சேர்ப்பதையுமே நாடுகிறேன். நாம் கேட்பதற்கு முன்னமே நமது தேவைகளை அவர் அறிந்திருக்கிறார் (மத். 6:8). இந்த புதிய வருடத்தில் உங்களுக்கு என்ன வாக்குத்ததம் கிடைத்திருந்தாலும் அதை அடையும் படியாய் அனுதினமும் ஜெபியிங்கள். எல்லாவற்றிர்க்கும் மேலாக பரலோகத்தில் ஐசுவரியவான்களாயிருக்கும் படி அநேக ஆத்துமாகளை பரலோகத்திற்க்கு நேராய் நடத்துங்கள். 2014 ம் வருடத்தில் அநேக ஐசுவரியங்களை பூலோகத்திலும், பரலோகத்திலும் சேருங்கள். கர்த்தர்  தாமே ஆசீர்வதிப்பாராக.


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " ஐசுவரிய ஆசீர்வாதம் "

Post a Comment