விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


மௌனமாயிருக்காதே – நீ மௌனமாயிருக்காதே
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?


நம்மில் அநேகருக்கு இந்த பாடல் தெரிந்திருக்கக்கூடும். கிறிஸ்த்தவர்கள் அதாவது கிறிஸ்துவின் அன்பை மெய்யாக உணர்ந்தவர்கள் யாரும் மௌனமாயிருக்ககூடாது என்பதே இந்த பாடலின் அர்த்தமாகும். ஆமான் என்ற துஷ்ட மனிதன் மூலமாக யூத குலமே அழியும் தருவாயில் மொர்தெகாய் தனது சித்தாப்பா மகளாகிய எஸ்தரை பார்த்து சொல்கிறார் “நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்தில் இருந்து எழுப்பும்” எஸ்தர் 4:14. ராஜ ஸ்திரீயாகிய எஸ்தர் தனது வளர்ப்பு தகப்பனுக்கு கீழ்படிந்து தனது மவுனத்தை கலைத்து ராஜாவிடம் பரிந்து பேசி தனது ஜனத்தை காப்பாற்றினாள். ஒரு வேளை அவள் தான் ஒரு ராணி என்று சொல்லி மவுனமையிருந்திருந்தால் அந்த பெரிய அழிவில் அவளும் அழிந்திருக்ககக்கூடும்.

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் மவுனமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவின் அன்பை போதகர்கள் அறிவிக்கட்டும் என்று சொல்லி கிறிச்த்துவின் அன்பை அறிந்திருந்தும் அதை பிறருக்கு அறிவிக்காமல் மவுனமாயிருக்கிறார்கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்து மவுனமாய் சுயவாழ்க்கை வாழ்ந்திருந்தால் இன்றைக்கு நமக்கு இரட்சிப்பில்லை. குழந்தைகள் வளர்ந்து வரும் போது அந்த குழந்தைகள் பேசாவிட்டால் பெற்றோர்கள் எவ்வளவு வேதனை அடைவார்கள். நாமும் கிறிஸ்துவின் அன்பில் நாளுக்கு நாள் வளர்ந்து, மவுனமாயிருந்துவிட்டால் நமது தகப்பன் இயேசு எவ்வளவு வேதனை அடைவார். கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மால் இயன்ற அளவு அழிகின்ற மக்களுக்கு இயேசுவின் அன்பை அறிவிக்க வேண்டும் என்றுதான். மவுனத்தை விடுத்து இயேசுவின் அன்பை அநேகருக்கு சொல்லுவோம். அழிகின்ற ஆத்தும்மாக்களை ஆதாயம் செய்வோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment