விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்


சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்

மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என எபேசியர் 6:12 ஆணித்தரமாய் நமக்கு எடுத்துரைக்கிறது!

ஆவிக்குரிய வாழ்க்கையில் `ஜீவனோடு' இருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் பொல்லாத ஆவிகளோடு எப்போதும் ஓர் போராட்டத்தின் மத்தியில் இருப்பதை உணருவார்கள். ஆனால் ஆவிக்குரிய ஜீவனை இழந்த `செத்தவர்கள்' இதுபோன்ற போராட்டத்தை தங்கள் வாழ்வில் உணரமாட்டார்கள். ஏனெனில், இவர்கள் போர்களத்தில் `செத்துக் கிடக்கும்' சிப்பாய்களைப்போல் இருக்கிறபடியால் அவர்களை `எதிரி' ஒரு பொருட்டாய் எண்ணுவதில்லை! அதேபோல், மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடுகிறவர்களையும் எதிரியாகிய சாத்தான் அலட்சியப்படுத்தி...... மானிடர்களோடு சண்டையிட்டு மாயும்படி அவர்களைத் தனியே விட்டுவிடுகிறான்! ஆம், முழு இருதயம் கொண்டு கர்த்தருக்கென்று அக்கினிப்பிளம்பாய் இருப்பவர்கள் மாத்திரமே சாத்தானுக்கு `நடுக்கத்தைத்' தருகிறார்கள். இவர்கள் மாத்திரமே “கர்த்தருடைய யுத்தத்தை” செய்திட முடியும்!!

இவ்வாறு ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நாம், எல்லா சமயங்களிலும் மனஉறுதியுடன்கூடிய விழிப்புடன், சகல விசுவாசிகளுக்காகவும்...... குறிப்பாக தேவனுடைய வார்த்தையை உத்தமமாய் பிரசங்கிப்பவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டுமென தொடர்ந்து காணும் வசனங்கள் நம்மைத் துரிதப்படுத்துவதைக் காண்கிறோம் (எபேசியர் 6:18,19). சர்வாயுதவர்க்கத்தோடு யுத்தகளத்தில் போரிடுவோம். ஜெய கிறிஸ்து நம் பக்கம் இருக்கின்றார். ஆமென். அல்லேலூயா.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " "

Post a Comment