விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கர்த்தருடைய சிந்தை


கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? ரோமர் 11:34

அபோஸ்தலராகிய பவுல் ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வார்த்தையை (ஏசாயா 40:13) இங்கே மேற்கோளிட்டு காண்பிக்கின்றார். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பதாக தேவனுடைய சிந்தையில் (Mind of God) உள்ள காரியங்களை மனிதனால் அறியகூடாதிருந்தது. பெரிய தீர்க்கதரிசியாக கருதப்படுகிற ஏசாயா-வே சொல்கிறார், யார் தேவனுடைய சிந்தையை அறியக்கூடும் என்று. அப்படியென்றால் சாதாரண மக்களால் தேவனுடைய சிந்தையில் உள்ள காரியங்களை அறிய முடியுமா?

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனாகிய இயேசு, தேவனை நம்மக்கு வெளிப்படுத்துவதற்காகவும் அவரது சிந்தையை நாம் அறிந்துகொள்ளும் படியாகவும் இந்த உலகத்தில் பிறந்தார்.  (யோவான் 1:18)

அபோஸ்தலராகிய பவுல் I கொரிந்தியர் 2:16 -ல் சொல்கிறார், தேவனுடைய சிந்தையை யாராலும் அறிந்துகொள்ளமுடியது. ஆனால் கிறிஸ்துவின் சிந்தையே (Mind of Christ) எங்களுக்கு உண்டாயிருக்கிறது. இந்த கிறிஸ்துவின் சிந்தை நம்மை ஆட்கொள்ளும் பொழுது தேவனுடைய இருதயத்திலும் சிந்தையிலும் உள்ள காரியங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

பிரியமான சகோதர சகோதரிகளே நம்முடைய சிந்தை (Our mind) கிறிஸ்துவினுடைய சிந்தையாக இருக்கிறதா என்று சோதித்து பாருங்கள். பணம் சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், பிள்ளைகள் நான்றாக வாழ சொத்து சேர்க்க வேண்டும் என்று அநேக நேரம் உலக சிந்தையே நம்மை ஆட்கொள்ளுகிறதா? நாம் அணைவரும் உலகத்தில் வாழ்வதால் நிச்சயமாக உலக சிந்தனைகள் இருக்கத்தான் செய்யும். அது தவறு இல்லை. ஆனால் நமது சிந்தனையில் முழுவதுமாக உலக காரியங்களே இருந்தால் நாம் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பது இயலாத காரியமாகிவிடும்.

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் அழிந்து போகின்ற ஆத்துமாக்களை பரலோகம் சேர்க்கும் படியான கிறிஸ்துவின் சிந்தை நம்மை ஆள்கிறதா? ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட்ட கிறிஸ்தவனின் சிந்தனையும் அவருடைய சிந்தனையால் நிரம்பியிருபதே தேவனின் விருப்பமும் கூட. ஆகவே கிறிஸ்துவின் சிந்தனையால் நிறைவோம். தேசத்தை சுதந்தரிப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

விசுவாசத்தில் வாழ்க்கை
★☆★ Like Tag Share ☆★☆

0 Response to " கர்த்தருடைய சிந்தை "

Post a Comment