விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

VV ministry -About Ministry


விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
கிறிஸ்துவில் அன்பானவர்களே,

நாங்கள் சிறு குழுவாக இனைந்து பகுதி நேர ஊழியம் செய்து வருகின்றோம். கிராமங்களில் சபைகளை கட்டி எழுப்புவது எங்களுக்கு தேவன் கொடுத்த தரிசனம். அதை செயல் படுத்தும் வகையில் கிராமங்களில் ஜெபநடை செய்து பாமர மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து வருகின்றோம். நாங்கள் செல்லும் சபைகளில் ஊழிய பாரம் உள்ளவர்களை  எங்களோடு அழைத்து சென்று, சுவிசேஷம் அறிவிக்கும் எளிய முறைகளைக் கற்றுக் கொடுக்கின்றோம். மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சுவிஷேச பனியனும் வழங்குகிறோம்.
உங்களுடைய சபை வளர்ச்சிக்காக நீங்கள் பாரத்தோடு ஜெபிபீர்கள் என்று சொன்னால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். எமது குழுவிலிருந்து இருவர் அல்லது மூவர் உங்களுடைய பகுதிக்கு வந்து இரண்டு நாள் (சனி, ஞாயிறு) சுவிஷேச ஜெப நடை செய்வார்கள். ஒரு நாள் கிராமங்களிலும், ஒரு நாள் சபையை சுற்றிலும் ஜெப நடை செய்து, சுவிசேஷம் அறிவிப்பார்கள். இந்த ஊழியத்தை நாங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் தன்னார்வமாய் செய்வதினால், எந்த வித காணிக்கைகளையும் எமது குழுவினர் பெறுவதில்லை. குழுவினருக்கு தங்க இடமும், உணவும் மட்டுமே இன்றியமையாதது. இந்த ஜெபநடை ஊழியத்தின் மூலம் அநேக சபைகள் வளர்ந்து வருகின்றது. உங்கள் பகுதியில் சுவிஷேச ஜெபநடை செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருந்தால் கீழ்க்கண்ட எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
சகோ. டேவிட் தாமோதரன் – 09916 424 517
சகோ. டேனியல் – 09739 833 659
விசுவாசத்தில் வாழ்க்கை கீதங்கள் பாடல்களை கீழ்க்கண்ட தளத்தில் சென்று கேட்டு உங்கள் சபைகளில் பாடலை அறிமுகம் செய்யுங்கள்.


கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
கிறிஸ்துவின் பணியில்

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்